உடல் முழுக்க பனி.. உறைந்துபோன முகம்! தாடி, மீசை எல்லாம்.. அம்மாடி! ஆனாலும் அமைதியாக யோகா! யார் இவர்
டெல்லி: இமயமலையில் உடல் முழுக்க பனி போர்த்தி இருப்பது போல யோகி ஒருவர் தியானம் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
இந்த நவீனக் காலத்தில் நாம் 24 மணி நேரமும் வேலையை நோக்கியே ஓடிக் கொண்டு இருக்கிறோம். இதனால் பலரும் மன அமைதியை இழந்தே சுற்றி வருகிறார்கள். அவர்கள் அனைவரும் கடைசியாகச் செல்லும் இடம் ஆன்மீகம் மற்றும் யோகாவாக இருக்கிறது.

இங்கே பல வகையான யோகா முறைகள் இருக்கும் நிலையில், அதைக் கற்கப் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்போது யோகா என்பது இந்தியாவைத் தாண்டி உலகளவில் கவனம் பெறும் விஷயமாக மாறிவிட்டது.
ஆழ்ந்த தியானம்: இதற்கிடையே இமாச்சல பிரதேசத்தின் பனி படர்ந்த மலைப்பகுதியில் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கியிருக்கும் யோகியின் படம் ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இது நெட்டிசன்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ஆன்லைனில் வெளிவந்த அந்த வீடியோவில், சத்யேந்திர நாத் என்று அந்த யோகி இருந்தார். அவரது ஆடை, தலைமுடி, முகம் என அனைத்துமே பனியால் மூடப்பட்டு இருந்தது.
அதைப் பார்க்கும் பலராலும் அதை நம்பவே முடியவில்லை. முதலில் பலருமே அது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்றே கூறினர். இது தொடர்பாக விசாரிக்கும் போது தான் அது ஏஐ வீடியோ எல்லாம் இல்லை.. இமாசல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள செராஜ் பள்ளத்தாக்கில் எடுக்கப்பட்டது என்பது உறுதியானது. பஞ்சார் என்ற பகுதியைச் சேர்ந்த சத்யேந்திர நாத், கௌலாந்தக் பீத் ஆசிரமத்தில் கடந்த 22 ஆண்டுகளாக யோகா பயிற்சி செய்து வருகிறார்.
இமயமலை யோகா: இவர் இஷ்நாத் என்று இமயமலை யோகியை பின்தொடர்கிறார். இந்த இஷ்நாத் என்பவர் தான் இமயமலை யோகா பாரம்பரியமான இஷ்புத்ராவை உருவாக்கி வருகிறார். இந்த இஷ்நாத் சாதாரண இமயமலை யோகி இல்லை அவர், இமயமலை யோகா யுக்தியின் மையமாகவும் மற்றும் தெய்வீக இடமாகவும் அறியப்படும் கௌலாந்தக் பீடத்தின் தலைவராக அறியப்படுகிறார். மேலும், இந்த இஷ்நாத்தின் பக்தர்கள் எட்டுக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளனர்.
இந்த வீடியோ, பலரை வியப்பில் ஆழ்த்தினாலும் இது உண்மை தான்.. இருப்பினும், சிறுவயதிலிருந்தே யோகா பயிற்சி செய்து வருவதால் இதெல்லாம் அவருக்குப் பெரிதாகவே தெரியாது. ஆனாலும், இதுபோன்ற கடுமையான பனிப்பொழிவுகளுக்கு இடையே யோகா பயிற்சி செய்ய மிகக் கடுமையான பயிற்சி தேவைப்படுகிறது, அதைத் தான் சத்யேந்திர நாத் செய்துள்ளார்.
உண்மை தான்: இஷ்புத்ரா என்பது சவாலான வானிலைகளிலும் அமைதியாகத் தியானம் செய்யும் முறையாகும். அதை தான் இவர் செய்து காட்டுகிறார். இந்த வீடியோ பிப்ரவரி முதல் வாரத்தில் இஷ்நாத்தின் சீடர் ராகுல் என்பவரால் பதிவு செய்யப்பட்டது, அவர் சத்யேந்திர நாத்தின் யோகா பயிற்சிகளை அடுத்து வரும் தலைமுறையினருக்கு கற்றுத் தரவே வீடியோ எடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் இணையத்தில் தீயாகப் பரவிய அந்த வீடியோ ஏஐ எல்லாம் இல்லை.. கடினமான பயிற்சியின் மூலம் யோகி செய்தது தான் என்பது தெரிய வருகிறது. இப்போதும் பலரும் இந்த வீடியோவை பார்த்து மிரண்டு போகும் வகையிலேயே இது இருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications