மக்களே உஷாரா இருங்க.. தினமும் 3 ஆயிரம் கிடைக்கும்..வாட்ஸ் அப் மெசேஜை நம்பி ரூ.10 லட்சம் இழந்த இளைஞர்
டெல்லி: தினமும் 3 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என வந்த வாட்ஸ் அப் மேசேஜை நம்பி பணத்தை முதலீடு செய்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளைஞர் கடைசியில் ரூ. 10 லட்சத்தை இழந்துள்ளார். இந்த மோசடி நடைபெற்றது எப்படி என்ற விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
இணைய பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டதால் இணையம் வழியாக நடைபெறும் குற்றங்களும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. சைபர் கிரைம் என்று சொல்லப்படும் இத்தகைய மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் எங்கே இருந்து கொண்டு வங்கிக் கணக்கில் இருந்து லட்சகணக்கில் சுருட்டி ஏமாற்றி விடுகின்றனர்.
வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி ஏ.டி.எம் கார்டு தருகிறோம்.. ஆதார் எண் அப்டேட் செய்து கொடுக்கிறோம் என பேசும் மோசடி நபர்கள் நைசாக பேசி வங்கிக் கணக்கு விவரங்களை வாங்கி பணத்த்தை திருடுவது.. ஏதேனும் ஒரு செயலியை தரவிறக்கம் செய்யச் சொல்லி தன் மூலமாக நமது செல்போன் கட்டுப்பாட்டை கைக்குள் எடுத்து மோசடியில் ஈடுபடுவது போன்ற இணைய வழி குற்றங்கள் அதிகரித்து வருகிறது.

தினமும் 3000 சம்பாதிக்கலாம் என..
இன்னும் சில நேரங்களில் பரிசுப் பொருள் விழுந்து இருப்பதாகவும் அதை பெற குறிப்பிட்ட தொகையை கட்டுங்கள் என்றும் சொல்லியும் பணத்தை மோசடி நடைபெற்று வருகிறது. தற்போது இதே போன்ற ஒரு மோசடிதான் ஆந்திராவிலும் நடைபெற்றுள்ளது. வாட்ஸ் அப் லிங் மூலமாக தினமும் 3 ஆயிரம் சம்பாதிக்கலாம் என ஆசைக் காட்டி பணத்தை முதலீடு செய்து ரூ.10 லட்சம் வரை இளைஞர் ஒருவரிடம் மோசடி நடைபெற்றுள்ளது. ஆந்திராவில் நடைபெற்ற இந்த மோசடி குறித்த விவரம் வருமாறு:-

வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ்
ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி மேசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜில் ஒரு லிங்க்கும் கொடுக்கப்பட்டு இருந்திருக்கிறது. அந்த இளைஞரும் லிங்கை கிளிக் செய்து பார்த்த போது பகுதி நேர வேலைக்கு நீங்கள் தேர்வாகியிருக்கிறீர்கள் என்றும் ஆன்லைன் மூலமாக ஏதேனும் ஒரு பொருளில் முதலீடு செய்து அதை விளம்பரப் படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்திருக்கிறது.

மோசடி வலையில் சிக்கிய இளைஞர்
முதலீடு செய்த அந்த பொருளின் விலை ஏற லாபமும் உயரும் என்று ஆசை காட்டியிருக்கின்றனர். நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் வரை கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதனால், நல்ல பணம் சம்பாதிக்க முடியும் என்று நம்பிய அந்த இளைஞரோ மோசடி கும்பல் விரித்த வலையில் சிக்கியிருக்கிறார். அந்த மேசேஜில் கூறிய தகவல் படி ஆன்லைன் டிரேடிங்கில் அந்த இளைஞர் ஈடுபட்டு இருக்கிறார். சில ஆயிரம் ரூபாய் பணத்தை கட்டி ஒரு பொருளில் முதலீடு செய்துள்ளார்.

10 லட்ச ரூபாய் முதலீடு
அதில் லாபம் கிடைத்துள்ளதாகவும் அது உங்கள் வாலட்டில் ஏறியிருக்கிறது... இந்த பணத்தை நீங்கள் எடுக்க கூடுதலாக பணம் கட்டி டிரேடிங்கில் ஈடுபட வேண்டும் என்று சொல்லியிருக்கின்றனர். அதனை நம்பி மேலும் சில ஆயிரங்களை முதலீடுகளை செய்துள்ளார். அதில் லாபம் கிடைத்ததாகவும் அந்தப் பணமும் உங்கள் வேலட்டில் ஏறியிருப்பதாகவும் ஆசை காட்டியிருக்கின்றனர். ஆனால், இந்த தொகையை எடுக்க இன்னும் அதிக டிரேடிங் செய்யுமாறு கூறியதால் 16 முறை பணத்தை கட்டியுள்ளார். அதாவது சுமார் 10 லட்ச ரூபாயை இப்படி முதலீடு செய்துள்ளார்.

ராஜஸ்தான் நபர் கைது
ஆனால், தனது லாபத்தொகை என்று கூறப்பட்ட தொகையை எடுக்க முடியவில்லை. இது குறித்து இளைஞர் கேட்ட போது தொடர்பை முற்றிலும் துண்டித்துள்ளனர். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டது இளைஞருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசில் அந்த இளைஞர் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ஆந்திர போலீசார் விசாரணை நடத்தி ராஜஸ்தானை சேர்ந்த ரஜத் சக்சேனா என்பவரை ஆந்திர போலீசார் கைது செய்தனர்.

குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க
தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ரஜத் சக்சேனா குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு சைபர் குற்றவாளிகளுடன் கூட்டாக இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். மோசடி கும்பல் சக்சேனாவின் வங்கிக் கணக்கு மூலமாக பணத்தை பெற்று வந்துள்ளார். இதற்காக சக்சேனாவிற்கு கமிஷனும் கொடுத்து வந்திருக்கின்றனர். சைபர் குற்றவாளிகளுக்கு உடைந்தையாக இருந்ததாக ரஜத் சக்சேனா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்ட பிற நபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

மக்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே
இதுவரை சுமார் 18 கோடி வரை இந்த மோசடி கும்பல் சுருட்டியிருக்கலாம் என்றும் வெளிநாடுகளுக்கு சென்று இருப்பதும் தெரியவந்துள்ளது. பொதுமக்கள் வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றில் சந்தேகத்திற்கிடமான வகையில் வரும் மெசேஜ்களை நம்ப வேண்டாம் என்றும் அதில் உள்ள லிங்க்கை கிளிக் செய்வதன் மூலம் சைபைர் திருட்டுகளினால் பாதிக்கப்படக்கூடும் என்று எச்சரித்துள்ள போலீஸார் மக்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே இத்தகைய மோசடியில் இருந்து தப்ப முடியும் என்கிறார்கள்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications