80 சென்ட் நிலம்.. தர்மபுரியை "சாய்த்த" விவசாயி.. தரம் உயர்ந்த அரசு பள்ளி.. ஓடோடி வந்த ஸ்டாலின்.. செம
தர்மபுரி: 18 வருடங்களுக்கு முன்பு, விவசாயி செய்த காரியம், இன்று மிகப்பெரிய பாராட்டையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. இந்த விவசாயிக்கு தமிழக அரசு தற்போது உதவிகளையும் செய்துள்ளது. என்ன நடந்தது தர்மபுரியில்?
அரசு பள்ளிக்கு, தங்களுடைய சொந்த நிலத்தை தானமாக தருபவர்கள் வெகுசொற்பமே.. அந்தவகையில், மதுரை பூரணத்தம்மாளை தமிழக மக்களால் மறக்கவே முடியாது.

மகளின் ஆசை: 53 வயதான பூரணம்மாள் கணவரை இழந்தவர்.. கனரா வங்கியில் வேலைபார்த்த இவரது கணவர்உக்கிரபாண்டியன், 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். வாரிசு அடிப்படையில் கணவரின் வேலை கிடைத்து, தற்போது மதுரை தல்லாகுளம் கனரா வங்கிக் கிளையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.
இவரது 30 வயது மகள் ஜனனியும் 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவர் இறக்கும் தருவாயில் தன்னுடைய அம்மாவிடம், தாத்தா வழங்கிய நிலத்தை சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு தானமாக வழங்குமாறு சொல்லியிருக்கிறார்..
நிலப்பத்திரம்: அதன்படியே, மகளின் விருப்பத்தை நிறைவேற்றும்விதமாக, கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக, தன்னுடைய பெயரிலிருந்த ரூ.4 கோடி மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார் பூரணம்.. பள்ளியின் பெயரில் அந்த நிலத்தை பத்திரப் பதிவும் செய்து கொடுத்தார்.
இதன் மதிப்பு ரூ. 7 கோடி. பள்ளி தரம் உயர்த்தப்படும்போது அந்த இடத்தில் வகுப்பறைகள் மட்டும் கட்டிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். பூரணத்தம்மாளின் செயல்பாட்டிற்கு பலதரப்பில் இருந்து பாராட்டும், வாழ்த்துகளும் குவிந்தன. அவரை பாராட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருதும் வழங்கி கவுரவித்திருந்தார்.
மீண்டும் நிலம்: இதற்கு பிறகு, அதே பள்ளிக்கு மறுபடியும் 91 சென்ட் நிலத்தையும் தானமாக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார் பூரணம்மாள். இப்போது இதன் மார்க்கெட் மதிப்பு ரூ.3 கோடி வரை இருக்கும் என்கிறார்கள்.
அந்தவகையில், அரசு பள்ளிக்கு நிலத்தை தந்து உதவிய பூரணம்மாவை தமிழக மக்கள் எளிதில் மறக்க முடியாது.. அதுபோலவே, தர்மபுரி மாவட்டத்திலும் ஒரு சம்பவம் நடந்தது.. அரசு தர்மபுரி மாவட்டம், ஜாலிப்புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன்... 64 வயதாகிறது.. இவர் ஒரு விவசாயி.. ஜாலிப்புதுார் ஊராட்சியில், அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு, தனக்குச் சொந்தமான 80 சென்ட் விவசாய நிலத்தையும் கடந்த 2006ல், அரசுக்கு தானமாக வழங்கியிருக்கிறார்..
50 மனுக்கள்: ஆனால், முருகேசன் வாழ்வதற்கு வீடு இல்லாமல் போய்விட்டது.. தங்குவதற்கு இடமில்லாமல் மிகவும் அவதிப்பட்டார்.. அப்போது, 5 சென்ட் இடம் அரசு சார்பில் கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.. ஆனால், அதற்கு பிறகு எந்த நடவடிக்கையும் அரசு தரப்பில் மேற்கொள்ளப்படவில்லை.. இப்படியே 18 வருடங்கள் உருண்டேடோடிவிட்டன.. 50க்கும் மேற்பட்ட மனுக்களையும் முருகேசன் அதிகாரிகளிடம் தந்துவிட்டார்.
அந்த விவசாயி குடியிருக்க வீடு இல்லாமல், ரேகடஹள்ளி அகரம் மருத்துவமனையில், நைட்டியூட்டி வாட்ச்மேனாக வேலை பார்த்து, அங்கேயே தங்கியிருப்பதாகவும் செய்திகள் கசிந்து வந்தன..
சொந்த நிலம்: இந்த விஷயம் தமிழக முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு சென்றது.. இதையடுத்து, விவசாயி முருகேசனுக்கு வீட்டுமனை வழங்க உத்தரவிட்டார்... அதன்படியே, விவசாயி முருகேசன் குடியிருக்க, ரேகடஹள்ளி கிராமத்தில் வீட்டுமனை ஒதுக்கீடு செய்து, அதற்குரிய பட்டாவை, பாப்பிரெட்டிப்பட்டியில் நடந்த விழாவில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தற்போது வழங்கியிருக்கிறார்.. 18 வருடங்களுக்கு முன்பு, அரசு பள்ளிக்கு சொந்த நிலத்தை வழங்கிய முருகேசனுக்கு மீண்டும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன..!!!
சில மாதங்களுக்கு முன்பு, விருதுநகர் மாவட்டம் எம் புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த டாக்டர் மணிவண்ணன் என்பவரும் இப்படி ஒரு சேவையை செய்திருந்தார்.. திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் கலைக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்ற குருசாமி என்பவரது மகன் டாக்டர் மணிவண்ணன், அமெரிக்காவில் தற்போது R&D DIRECTOR ஆக உள்ளார். தான் பிறந்த ஊரில் உள்ள அரசு பள்ளிக்கு, தன்னுடைய தாய் தந்தை நினைவாக 40 லட்சம் ரூபாய் மதிப்பு உள்ள 2 ஏக்கர் நிலத்தை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தானமாக வழங்கியிருந்ததும் இங்கு போற்றத்தக்கது.












Click it and Unblock the Notifications