மகாராஷ்டிராவில் இருந்து தப்பிய மாவோயிஸ்ட்.. தருமபுரியில் மேஸ்திரி வேடத்தில் இருந்தபோது கைது
தருமபுரி: மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையதாக அறியப்பட்ட இளைஞர் மகாராஷ்டிராவிலிருந்து தப்பி தமிழகத்தின் பாப்பிரெட்டிப்பட்டியில் தலைமறைவாக இருந்த நிலையில் அவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் பலத்த பாதுகாப்புடன் மகாராஷ்டிரா போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
Recommended Video

மகாராஷ்டிரா மாநிலம் பங்காரப்பேட்டையை சேர்ந்தவர் செட்டே என்கிற சீனிவாச முல்லாகெவுடு (23). இவர் மகாராஷ்டிராவில் மாவோயிஸ்டுகளுக்கு தனது கைப்பையில் வெடிகுண்டு சப்ளை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செட்டே, அந்த வெடிகுண்டு வழக்கில் அங்கிருந்து தப்பி வந்து திருப்பூரில் கட்டட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். இவர் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பாப்பம்பாடி மாருதி நகரில் சிவக்குமார் என்பவரது வீட்டில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது.

செல்போன் டவர்
இதை அவரது செல்போன் டவரை வைத்து மகாராஷ்டிரா போலீஸார் கண்டறிந்தனர். செட்டேவை கைது செய்ய தமிழக போலீஸாரின் உதவியை மகாராஷ்டிரா போலீஸார் நாடினர். இதற்காக ஏ.பள்ளிப்பட்டி போலீஸாருக்கு செட்டே குறித்த தகவல்களை கொடுத்தனர்.

அடைக்கலம்
அதன்பேரில் தமிழக போலீஸார் விரைந்து சென்று சிவக்குமார் வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு வீட்டில் பதுங்கியிருந்த செட்டேவை உபா சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்தது குறித்து சிவக்குமாரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

உறவினர் வீடு
தனது மனைவியின் உறவினர் கோயில் திருவிழாவிற்கு அழைத்ததன் பேரில் சிவக்குமார் வீட்டில் பதுங்கியிருந்ததும் தெரியவந்தது. அவரிடம் தருமபுரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் விசாரணை நடத்தினார். இதையடுத்து பலத்த போலீஸார் பாதுகாப்புடன் மகாராஷ்டிரா அழைத்து செல்லப்பட்டார்.

பரபரப்பு விசாரணை
செட்டேவுக்கு அஞ்சலி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். மாவோயிஸ்ட் ஒருவர் இத்தனை நாட்களாக தமிழகத்தில் தங்கி மேஸ்திரி வேடத்தில் இருந்தது அதிர்ச்சி அளித்தது. அவருடன் அவருடைய கூட்டாளிகள் யாரேனும் தமிழகத்தில் தங்கியுள்ளனரா என்பது குறித்தும் அவர்களது திட்டம் என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தருமபுரியிலும் திருப்பூரிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் யாராக இருந்தாலும் அதிலும் குறிப்பாக சந்தேகத்திற்கு இடமான வகையில் யார் இருந்தாலும் அவர்களுடைய பின்புலத்தை அறிந்து கொண்டு பணி வழங்க வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications