Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செய்தியாளர் கேள்வி.. சட்டென பாஜக பிரமுகர் சொன்ன “வார்த்தை”! அதிமுக “ஷாக்” - கூட்டணி என்றும் பார்க்கல

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: பாரத மாதா நினைவாலயம் என்று பெயர் வைத்த அதிமுகவுக்கு அறிவு இல்லை என்று விமர்சித்த பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், இதை கோயிலாக அறிவிக்காவிட்டால் அத்துமீறுவோம் என எச்சரித்துள்ளார்.

தருமபுரியில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வந்த பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், "பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் பாரத மாதா சிலை அமைந்து இருக்கிறது. அதில் பாரதமாதா நினைவாலையம் என எழுதப்பட்டுள்ளதை அகற்ற வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

பாரத மாதா கோவில் என திருத்தி வழிபாட்டு தலமாக மாற்றவேண்டும் என்பதை வலியுறுத்தியும், பாரதமாத நினைவாலயம் என்பதை கண்டித்தும் விரைவில் கண்டன பொதுகூட்டம் நடத்த உள்ளோம். அதற்கு பிறகும் பாரதமாதா கோவில் என மாற்றவில்லை என்றால் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

காவல்துறை

காவல்துறை

பாஜகவுக்கு இடையூறு செய்யும் வகையில் தமிழக அரசு காவல்துறையை வைத்து மிரட்டி பார்ப்பது அச்சுறுத்துவது போன்றவற்றில் ஈடுபடக்கூடாது. காவல்துறையை பாஜக மீது ஏவ நினைத்தால், தேசத்தை பாதுகாக்கவும், நாட்டின் ஒற்றுமையை பாதுகாத்திடவும் பாஜக எதை பற்றியும் கவலைபடாமல் தேசம் முக்கியம் என உணர்வோடு போராட்டத்தை தொடரும் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்." என்றார்.

அதிமுகவினருக்கு அறிவு இல்லை

அதிமுகவினருக்கு அறிவு இல்லை

அப்போது, பாரத மாதா நினைவாலையம் என தங்களுடன் கூட்டணியில் இருந்த அதிமுக அரசுதான் பெயர் வைத்தது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராமலிங்கம் "அதிமுவினருக்கு தான் அறிவு இல்லை. தற்போது ஆட்சி நடத்துபவர்கள் அறிவாளிகள் என கூறுகின்றனர். பெயர் மாற்றாமல் இருப்பவர்களும் படுமுட்டாள்தான்.

அத்துமீறல் தொடரும்

அத்துமீறல் தொடரும்

அவர்கள் பெயர் மாற்றவில்லை என்றால் நாங்களே மாற்றுவோம். அப்போது எல்லாம் ஆதிதிராவிடனர் கோவிலுக்குள் செல்லும் போராட்டம் நடத்தவில்லையா? அது போன்று நாங்கள் சென்று வழிபாட்டு தளமாக மாற்றுவோம். இதை முறையாக கேட்கிறோம். ஏற்காவிட்டால் அத்துமீறல் தொடரும். இந்த தேசத்தில் ஆட்சி பொறுப்பில் இருப்பதற்கு உங்களுக்கு உரிமை இல்லை என்ற நிலைப்பாட்டை நாங்கள் எடுப்போம்." என கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+