ஜிகே மணி அய்யாவின் ரைட் ஹேண்டா? ஸ்டாலினின் ’ஸ்பை’ அவர்! ஜிகேஎம் தமிழ்க்குமரனையும் விடாத அன்புமணி!
தருமபுரி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வது போல, ஜி.கே.மணி அய்யாவின் (ராமதாஸ்) வலது கரமில்லை; அவர் ஸ்டாலினோட வலது கரம், தமிழ் குமரன் உதயநிதி ஸ்டாலினின் வலது கரம் எனவும், துரோகிகள், அவர்களை பற்றி பேசக்கூடாது எனக் கூறியுள்ளார் பாமக தலைவரான அன்புமணி ராமதாஸ்.
தர்மபுரியின் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து அன்புமணி பிரச்சாரம் செய்தார் தர்மபுரி தொகுதிக்குட்பட்ட நல்லம்பள்ளி ஒன்றியத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து சௌமியா அன்புமணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அன்புமணி," சௌமியா அன்புமணி வெற்றி பெற்றால், தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும். எடப்பாடி முதல்வராவார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சொற்ப வாக்கு வித்யாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்.

அன்புமணி ராமதாஸ்
மீண்டும் இந்த நல்ல வேட்பாளரை கொடுத்திருக்கிறோம். நீங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து, சாதி, மதம், கட்சி பேதமின்றி வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்த தொகுதி மட்டுமில்லாமல், மாவட்ட வளர்ச்சி பெற வேண்டும். இந்த கொடுங்கோல் திமுக, சாராயம் விற்பனை செய்யும், பெண்களுக்கு எதிரான திமுகவை விரட்டியடிக்க வேண்டும். இந்திய நாடு விடுதலை பெற்ற பின், கடந்த 79 ஆண்டுகளில் தருமபுரி தொகுதியில் பெண்கள் சட்டமன்ற உறுப்பினராக வரவில்லை.
சௌமியா அன்புமணி
அதனால் கேட்கிறேன். பெண் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற வைக்க வேண்டும். சௌமியா அன்புமணிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். சௌமியா அன்புமணி சட்டமன்றத்திற்கு சென்றால் பெண்கள் பாதுகாப்பை பற்றி தைரியமாக சட்டமன்றத்தில் பேசுவார். 5 ஆண்டுகளாக ஊழல் ஆட்சி செய்த திமுகவை விரட்டியடிக்க வேண்டும். ஸ்டாலினுக்கு ஒரு பழக்கம் உண்டும். 'அந்த 7 நாட்கள்' படத்தில் பாக்யராஜ் சுண்டல் விற்பனை செய்யும்போது, முஸ்லீம் பகுதிக்கு சென்றால், குல்லா போடுவார், கிறிஸ்துவராக இருப்பார்.
வன்னியர்கள்
அதுப்போல தருமபுரி, விழுப்புரம் சென்றால், வன்னியர்கள் பற்றி பேசுவார். கோவை போனால் தீரன் சின்னமலை பற்றி பேசுவார். அதுதான் திமுக ரத்தத்தில் ஊறியது. இன்று தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் சொல்கிறார், 'அய்யாவின் வலது கரம் ஜி.கே.மணியாம்', அவரது மகன் தமிழ் குமரனுக்கு கை சின்னத்தில் வாக்களிக்கனுமாம்.
ஜி.கே.மணி
ஜி.கே.மணி அய்யாவின் வலது கரமில்லை. ஸ்டாலினோட வலது கரம், தமிழ் குமரன் உதயநிதி ஸ்டாலின் வலது கரம். துரோகிகள், அவர்களை பற்றி பேசக்கூடாது. நாளை பென்னாகரத்தில் சொல்கிறேன். தருமபுரி மாவட்டத்தை பற்றி ஸ்டாலினுக்கு கவலையில்லை. இந்த மாவட்ட மக்கள் திமுகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள். இந்த தேர்தலில் 5 தொகுதிகளிலும் பூஜ்ஜியம் தான் கிடைக்க வேண்டும். நீங்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.
சட்டமன்ற தேர்தல்
தருமபுரி மாவட்ட மக்கள் படிக்க கூடாது. குடிக்கனும். இதுதான் ஸ்டாலின் எண்ணம். கடந்த ஓராண்டில் தருமபுரி மாவட்ட மக்கள் 3000 கோடிக்கு குடித்துள்ளனர். 5 ஆண்டுகளில் 15000 கோடிக்கு குடித்துள்ளனர். தருமபுயில் சிப்காட் தொடங்கியதாக சொல்கிறார்கள். எந்த தொழிற்சாலையும் வரவில்லை. அந்த இடத்தில் கற்கள் தான் இருக்கிறது. இதோ அங்கு கிடைத்த கல் என்று வெள்ளை நிறத்தில் ஒரு கல்லை எடுத்து காட்டினார். ஸ்டாலின் பாஜக பற்றி பேசிப் பார்த்தார் எடுபடல. இது நாடாளுமன்ற தேர்தல் இல்லை. சட்டமன்ற தேர்தல். இது உங்களுக்கும் மோடிக்கும் இல்லை. இபிஎஸ்-க்கும், உங்களுக்கும் தான் போட்டி" என்றார்.














Click it and Unblock the Notifications