Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தர்மபுரி பஸ் ஸ்டாண்டு அசிங்கம்.. "சென்னை காசிமேடு லோகு தெரியுமா? அல்லு உட்ரும்" 2 குடிமகள்கள் கைது

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் இரவு நேரத்தில், பயணிகள் மற்றும் போலீசாரிடம் போதையில் ரகளையில் ஈடுபட்ட சென்னை இளம்பெண்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இப்போது சேலம் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.. அவர்கள் யார்? என்ற விவரமும் தற்போது வெளியாகியிருக்கிறது.

எந்நேரமும் மக்கள் நடமாட்டத்துடன் பிஸியாகவே காணப்படும், தர்மபுரி பேருந்து நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பரபரப்பு சம்பவம் ஒன்று நடந்துவிட்டது..

Dharmapuri Bus Stand women

சென்னையை சேர்ந்த 2 இளம்பெண்கள், இளைஞர் ஒருவருடன் முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடந்து கொண்டிருக்கிறார்கள்.. பயணிகள், பொதுமக்கள் முன்னிலையிலேயே, 2 பெண்கள் நடந்து கொண்ட விதம், கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பயணிகள் அதிர்ச்சி

இதைப்பார்த்த பயணிகள், பொது இடத்தில் இப்படியா நடந்து கொள்வது? என்று அந்த பெண்களை கேட்டுள்ளனர்.. இதைக்கேட்டதும் கொந்தளித்துபோன அந்த பெண்கள், பயணிகளிடம் சண்டைக்கு வந்துவிட்டார்கள்.. சகட்டுமேனிக்கு மரியாதை இல்லாமல், மிகவும் தரக்குறைவாகவும் திட்டியதாக தெரிகிறது..

இந்த 2 பெண்களும் சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், மதுபோதையில் இருந்ததாகவும் தெரிகிறது.. பெண்கள் செய்த ரகளையால் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.. ஆனால், போலீசாரையும் அந்த பெண்கள் தரக்குறைவாக பேசி ரகளை செய்திருக்கிறார்கள்..

கடுமையான வாக்குவாதம்

ரோந்து பணியில் இருந்த போலீசாரிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் ஒரு பெண் சிகரெட் புகைத்துக்கொண்டே, "நாங்கள் சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர்கள், காசிமேட்டுல கோட்ரஸ்.. பர்மா நகர் தெரியுமா. லோகு அண்ணா தெரியுமா... பர்மா நகர்ல தனசேகர் தெரியுமா.. தனசேகர் வந்தா கிழிச்சி தொங்கவுட்ருவாரு.. அவரு பேர கேட்டா உனக்கு அல்லு உடாது.. உயிரவே உட்ருவ. நீயெல்லாம் பேசவே கூடாது. போய்ட்டே இரு" என்றார்.

பிறகு போலீஸ்காரரையும், பயணியையும் தகாத வார்த்தையால் திட்டியதுடன், அடிக்க பாய்ந்து அவர்களை கீழே தள்ளி விட்டனர். அதற்குள் கிருஷ்ணகிரி பஸ் வந்துவிடவும், அந்த பஸ்ஸில் அந்த 2 பெண்களும் ஏறி சென்றுவிட்டனர்.

தர்மபுரி பஸ் ஸ்டாண்டு

இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, "சென்னையில் இருந்து தர்மபுரிக்கு மசாஜ் பணிக்காக 2 இளம்பெண்களும் வந்திருக்கிறாரகள்.. டியூட்டி முடிந்த பிறகு பஸ் ஏறுவதற்காக தர்மபுரி பஸ் ஸ்டாண்டுக்கு வந்துள்ளனர். அப்போதுதான் பயணிகளை தரக்குறைவாக பேசியிருக்கிறார்கள். இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது" என்றனர்.

எனினும், பஸ் ஸ்டாண்டில் 2 பெண்களும் ரகளை செய்தது, வீடியோவாக சோஷியல் மீடியாவில் பரவ துவங்கியது. பெண்கள் பேசிய தகாத வார்த்தைகளை கண்டு பொதுமக்களும் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.

தனிப்படை அமைத்த போலீஸ்

இந்நிலையில், சம்பந்தப்பட்ட பெண்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.. அதாவது, கிருஷ்ணகிரி பஸ்ஸில் ஏறி சென்றதுமே, இவர்கள் இருவரையும் பிடிக்க எஸ்பி மகேஸ்வரன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதன்பேரில், இருவர் மீதும் 270, 296(பி), 132, 351(2) ஆகிய பிரிவின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதன் பேரில், சென்னை விரைந்த தனிப்படை போலீசார், சென்னை எண்ணூர் கமலம்மாள் நகரைச் சேர்ந்த அருண்குமார் மனைவி ஐஸ்வர்யா (27), தினேஷ்குமார் மனைவி கண்மணி (21) ஆகியோரை கைது செய்துள்ளார்கள்.. இவர்கள் 2 பேருமே நெருங்கிய தோழிகள் ஆவர்.. 2 பேருமே தங்களது கணவரிடம் சண்டை போட்டுவிட்டு, தனியாக வாழ்ந்து வருகிறார்கள். மசாஜ் செய்வது இவர்களது பணி என்பதால், சென்னை மற்றும் திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மசாஜ் சென்டர்களில் பணியாற்றி வந்துள்ளனர்.

தர்மபுரி மசாஜ் பணி

அப்படித்தான் தர்மபுரியிலிருந்தும் இவர்களுக்கு அழைப்பு வந்துள்ளது.. தர்மபுரியில் மசாஜ் பணி முடித்துவிட்டு, சென்னைக்கு கிளம்பும்போதுதான், தர்மபுரியில் பஸ் ஏற வந்துள்ளனர்.. ஆனால் அங்கு பஸ் எதுவும் இல்லாததாலும், விடிகாலையில்தான் பஸ் என்பதாலும், மது குடித்து விட்டு அங்கேயே ரகளையில் ஈடுபட்டு, பிறகு கிருஷ்ணகிரிக்கு சென்று, அங்கிருந்து சென்னை சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து, இருவரையும் தனிப்படை போலீசார் தர்மபுரிக்கு அழைத்து வந்து, மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில், இருவரும் சேலம் மகளிர் ஜெயிலில் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களை தர்மபுரிக்கு அழைத்து வந்த ஆண் நண்பர் குறித்து, போலீசார் விசாரித்து வருகிறார்கள்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+