சொத்துக்களே குறி.. சித்தின்னு கூட பார்க்கலேயே.. பெண்ணே பெண்ணுக்கு எதிரியாய் மாறி.. ஆடிப்போன தருமபுரி
தர்மபுரி: சொத்து விவகாரத்தில், கொலைவெறி தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.. ஒரு பெண்ணே, இன்னொரு கொலைக்கு முக்கிய காரணமாக உள்ளது, தர்மபுரி மாவட்ட மக்களை அதிர வைத்து வருகிறது. என்ன நடந்தது?
நாளுக்கு நாள் சொத்து பிரச்சனையை முன்னிறுத்தி நடைபெறும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்தபடியே உள்ளது.. சமீபத்தில்கூட, தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே ஒரு கொடூர கொலை நடந்தது.

இருதயராஜ் என்பவர் ஆதரியானூர் பகுதியில் உள்ள அச்சங்குளம் - கள்ளத்திகுளம் பகுதியில் மீன் பாசி குத்தகைக்கு எடுத்திருந்தார்.. இவர் இரவு நேரத்தில் குளத்துக் கரையில் காவல் இருப்பது வழக்கமாம்.. அப்படித்தான் சம்பவத்தன்றும் காவலில் இருந்தபோது, சில மர்ம நபர்கள் அவரை அரிவாளால் தாக்கி அவரது தலையை துண்டித்து கொன்றுவிட்டனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோதுதான், சொத்து பிரச்சனைக்காக குடும்பத்தினரே இந்த கொலையை செய்தது தெரியவந்தது. எனவே, குற்றவாளிகளை போலீசார் செல்போன் எண்களை கொண்டு தேடி வருகிறார்கள். இந்நிலையில், சொத்து பிரச்சனைக்காக தர்மபுரியில் ஒரு கொலை நடந்துள்ளது.
ரங்கசாமி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த எண்டப்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கசாமி.. இவருக்கு 65 வயதாகிறது.. பாலக்கோடு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது முதல் மனைவி மாரியம்மாளுக்கு ஜெயராஜ் என்ற 38 வயதில் மகன் இருக்கிறார்.
ஆனால், பல வருடங்களுக்கு முன்பேயே ரங்கசாமியை விட்டு பிரிந்து சென்றுவிட்டாராம் மாரியம்மாள்... எனவே, ஜோதி என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார் ரங்கசாமி. இப்போது ஜோதிக்கு 45 வயதாகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.
மாரியம்மாள்: இந்நிலையில், ரங்கசாமி தன்னுடைய சொத்தில் ஒரு பகுதியை முதல் மனைவி மாரியம்மாளுக்கு தந்தார். ஆனால், அதை மாரியம்மாள் ஏற்காமல் தகராறு செய்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை, தன்னுடைய மகன், ஜெயராஜ், அவரது நண்பர் சந்தோஷ் இருவரையும் அழைத்துக் கொண்டு, ரங்கசாமி வீட்டுக்கு வந்தார் மாரியம்மாள்.. தற்போது வசித்து வரும் வீட்டை எழுதி தரச்சொல்லியும் ரங்கசாமியிடம் கேட்டுள்ளார்.
இதற்கு ரங்கசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த ஜெயராஜ் மற்றும் சந்தோஷ் இரும்பு ராடால் அவரை சரமாரியாக தாக்கினார்கள்.. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த 2வது மனைவி ஜோதி பதறியடித்து கொண்டு தடுக்க வந்தார்.. ஆனால், அவரையும் ஜெயராஜ் இரும்பு கம்பியால் தாக்கினார்.. இதில் ஜோதி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.. இதையடுத்து, மாரியம்மாள் உட்பட 3 பேருமே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள்.
வழக்கு பதிவு: இந்த கொலை குறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்த அவர்கள், சடலத்தை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து, தப்பியோடியவர்களை தேடி வருகிறார்கள். பெண்ணை கொலை செய்த விவகாரத்தில், ஒரு பெண்ணே ஈடுபட்டிருப்பது, தர்மபுரியில் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications