ஆட்டை அறுப்பதுபோல.. வயிற்றில் குத்திய கத்தியால், கழுத்தை சீவிய தர்மபுரி நபர்! நாசமா போன கள்ளக்காதல்
தர்மபுரி: 15 வயது சிறுமியின் காதல் விவகாரம், ஒரு கொடூர கொலை வரை சென்று முடிந்துவிட்டது.. அப்படி என்ன நடந்தது தர்மபுரியில்?
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ளது பாகல்பட்டி.. இங்கு வசித்து வருபவர் அரிகிருஷ்ணன்.. 24 வயதாகிறது.. இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார்.. இவரது வீட்டில் 22 வயது கதிரவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எந்த வேலை வெட்டிக்கும் போவது கிடையாதாம்.. காலை முதல் இரவு வெட்டியாக பொழுதை கழித்து ஊர் சுற்றி வந்துள்ளார்..

அரிகிருஷ்ணன்: இந்நிலையில், அரிகிருஷ்ணனுக்கு அதே ஊரை சேர்ந்த 35 வயது பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.. அந்த பெண்ணின் கணவன் இறந்துவிட்டார். எனவே, 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இதில் மூத்த மகளுக்கு 15 வயதாகிறது. இந்த பெண்ணுக்கும், ஊரைசுற்றி வந்த கதிரவனுக்கும் காதல் மலர்ந்துவிட்டது.
இந்த காதலுக்கு, அரிகிருஷ்ணன் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்... கதிரவனுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். ஆனால், இந்த காதல் ஜோடி எதையுமே கண்டுகொள்ளவில்லை... இது அரிகிருஷ்ணனுக்கு எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. அதனால், தொடர்ந்து இந்த ஜோடியை கண்காணித்து வந்துள்ளார்.
கதிரவன்: அப்படித்தான் நேற்றுமுன்தினம் நள்ளிரவு தாண்டியும், மறைந்திருந்து கதிரவனை கண்காணித்துள்ளார் அரிகிருஷ்ணன்.. அப்போது, கதிரவன் நடுராத்திரி வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.. உடனே அரிகிருஷ்ணன், கதிரவன் பின்னாடியே சென்றுள்ளார்.. அப்போதுதான் தெரிந்தது, அதிகாலை நேரத்தில், 15 வயது காதலியை சந்திப்பது வழக்கமாம்.
அப்படித்தான் காதலிக்காக வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு சென்று கதிரவன் காத்திருந்தார்.. அப்போது, அரிகிருஷ்ணன் வந்து அவரை லபக்கென மடக்கி பிடித்தார்... இதை கதிரவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை..
கைகலப்பு : இதையடுத்து, கதிரவனுக்கும், அரிகிருஷ்ணனுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.. பிறகு, கைகலப்பாகவும் வெடித்தது.. இதனால் ஆத்திரமடைந்த கதிரவன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அரிகிருஷ்ணன் வயிற்றில் குத்தினார்... இதில், வயிற்றிலிருந்து ரத்தம் கொட்டியது.. குடல் சரிந்து வெளியே வந்தது.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார் அரிகிருஷ்ணன்.
ஆனாலும், துடிதுடித்த நிலையிலும், வயிற்றில் இருந்த கத்தியை பிடுங்கி, பதிலுக்கு கதிரவன் கழுத்தில் அரிகிருஷ்ணன் வெட்டினார். இதில் கதிரவனும் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
அலறல் சத்தம்: விடிகாலை நேரத்தில் இருவரின் அலறல் சத்தம் கேட்டு, தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் விரைந்து வந்தனர்.. 2 பேருமே ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அரிகிருஷ்ணன் நேற்று உயிரிழந்துவிட்டார்..
அதேபோல, கதிரவன் சீரியஸாக இருக்கிறாராம்.. கழுத்து நரம்பு துண்டித்து உள்ளதாம்.. அதனால், நிலைமை சீரியஸாக உள்ளதாக சொல்கிறார்கள்.. இதுகுறித்து தொப்பூர் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
பரபரப்பு: காதல் செய்த இளைஞரும், கள்ளக்காதல் செய்த நபரும் ஒருவரையொருவர் குத்திக்கொண்டது தர்மபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications