வன்புணர்வு பற்றி சொல்லவேயில்லை.. டிஎஸ்பி திட்டமிட்டு மறைத்தார்.. தருமபுரி மாணவியின் தந்தை கண்ணீர்
தருமபுரியில் பாலியல் கொடுமையால் பலியான 12ம் வகுப்பு மாணவியின் தந்தை தனது மகளின் மரணம் குறித்து பல திடுக்கிடும் உண்மைகளை தெரிவித்துள்ளார்.
தருமபுரி: தருமபுரியில் பாலியல் கொடுமையால் பலியான 12ம் வகுப்பு மாணவியின் தந்தை தனது மகளின் மரணம் குறித்து பல திடுக்கிடும் உண்மைகளை தெரிவித்துள்ளார். இதில் போலீஸ் உண்மையை மறைக்கவே தொடக்கத்தில் இருந்து முயல்கிறது என்றுள்ளார்.
தருமபுரி அருகே சிட்லிங் கிராமத்தை சேர்ந்த பிளஸ் டு மாணவி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட காரணத்தால் மரணம் அடைந்துள்ளார். இந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரமேஷ் மற்றும் சதீஷ் என்று அதே கிராமத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை மட்டும் கொடுக்கப்படவில்லை. அவள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். போலீசார்தான் தன்னை கட்டாயப்படுத்தி, மிரட்டல் உண்மையை மறைக்க வைத்தனர் என்று அந்த சிறுமியின் தந்தை பேட்டியளித்துள்ளார்.
போலீஸ் தன்னிடம் காசு வாங்கி கொண்டு தன்னை மிரட்டியதாகவும் அந்த சிறுமியின் தந்தை அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

என்ன நடந்தது
அண்ணாமலையின் பேட்டியில், எனது மகள் தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். கடந்த ஐந்தாம் தேதி அவர் மலம் கழிப்பதற்காக அருகில் இருந்த காட்டிற்கு சென்ற போது, ரமேஷ் மற்றும் சதீஷ் இருவரும் அவளை பாலியல் வன்புணர்வு செய்து இருக்கிறார்கள். அதோடு அவளை மோசமாக தாக்கியும் உள்ளனர்.

புகாரை எடுக்கவில்லை
இந்த நிலையில் இதுபற்றி நான் போலீசிடம் புகார் அளித்தேன். போலீஸ் என்னுடைய புகாரை எடுக்கவில்லை. அதன்பின் 1077 உதவி எண் மூலம் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தேன். அதன்பின் மீண்டும் போலீசுக்கு சென்று புகார் அளித்தேன், அப்போதும் அவர்கள் புகாரை எடுக்கவில்லை. அதன்பின் கலெக்டர் ஆபிசில் இருந்து உத்தரவு வந்ததை அடுத்து என்னை அழைத்து புகாரை பெற்றுக் கொண்டார்கள்.

மறைக்க வைத்தார்
அதே சமயம் அந்த போலீஸ் நிலைய டிஎஸ்பி என்னை அழைத்து, வன்புணர்வு என்று எங்கேயும் சொல்ல கூடாது, பாலியல் தொல்லை என்று கூட சொல்லலாம், வன்புணர்வு என்று சொல்ல கூடாது என்று மிரட்டினார். மருத்துவமனையில் சேர்க்கும் போது கூட வன்புணர்வு குறித்து எந்த விஷயத்தையும் சொல்ல அனுமதிக்கவில்லை.

பலியானாள்
அதன்பின் வெறும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்துவிட்டு அவளை காப்பகத்தில் சேர்த்துவிட்டனர். ஆனால் அவளுக்கு தொடர்ந்து உடலில் பிரச்சனை இருந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் அவளுக்கு வாந்தி வந்து மருத்துவமனைக்கு எடுத்து சென்றோம். மருத்துவமனைக்கு சென்று அனுமதித்த சில நிமிடத்தில் அவள் பலியாகிவிட்டாள்.

வேண்டுமென்று தப்பவிட்டனர்
எனது மகளை வன்புணர்வு செய்த ரமேஷின் தாயார் மது வியாபாரம் செய்கிறார். அவர் போலீசுக்கு நெருக்கம் என்பதால் அவர்கள் இருவரையும் போலீஸ் தப்பவிட்டு இருக்கிறது. போலீஸ் வேண்டும் என்று குற்றவாளிகளை தப்பவிட்டு உள்ளது. என் மகளை இழந்துவிட்டு, நீதியையும் இழந்துவிட்டு நிற்கிறேன் என்று அந்த சிறுமியின் தந்தை அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications