தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு போன விஜி.. உடனே கனவிலும் நடக்க கூடாத சம்பவம்! பக்கத்தில் யாரு கணவனா?

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே நடந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் அதிர வைத்துள்ளது.. குடும்பத் தகராறு காரணமாக தனது காதல் மனைவி என்றுகூட கணவன் பார்க்கவில்லை.. ஒரு நிமிடம்கூட யோசிக்காமல் எடுத்த இந்த முடிவு, அந்த குடும்பத்தையே நிலைகுலைய வைத்துள்ளது.. பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர். அப்படி என்னதான் நடந்தது?

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த நல்லப்பநாயக்கனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (25). இவர் பென்னாகரம் பகுதியில் உள்ள ஒரு சலூன் கடையில் வேலை செய்து வருகிறார்.

Papparapatti Viji Murder Case

முருகேசன், ஏரியூர் அருகே உள்ள பாகிபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி (23) என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்குப் பெற்றோர்கள் பச்சைக்கொடி காட்டியதை அடுத்து, இருவரும் முறைப்படி கல்யாணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

மகிழ்ச்சியான வாழ்க்கை

ஆரம்பத்தில் இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது.. ஆனால் நாளடைவில் முருகேசனுக்குத் தனது மனைவி விஜயலட்சுமியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதங்களும் சண்டைகளும் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகராறு காரணமாக விஜயலட்சுமி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று விஜயலட்சுமிக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. அதனால் அவரைச் சிகிச்சைக்காகப் பாப்பாரப்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு முருகேசன் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு எல்லா செக்-அப்புகளும் முடித்துவிட்டு, 2 பேரும் மீண்டும் வீட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.

பாப்பாரப்பட்டி ஏரிக்கரை அருகே உள்ள மாட்டுச் சந்தை வளாகத்தைக் கடந்தபோது, அங்குள்ள பொதுக் கழிப்பறை பகுதிக்கு விஜயலட்சுமியை முருகேசன் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுள்ளார்.

அங்கு யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட முருகேசன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென விஜயலட்சுமியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.

பாப்பாரப்பட்டி விஜயலட்சுமி - முருகேசன்

மனைவி உயிரிழந்ததை உறுதி செய்த முருகேசன், தானும் அதே கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவர் வலியால் அலறிய சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். கழிப்பறை வளாகத்திற்குள் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதையும், ஒரு இளைஞர் கழுத்தறுபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதையும் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதிரடியில் குதித்த போலீஸ்

இதுகுறித்து உடனடியாகப் பாப்பாரப்பட்டி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிருக்கு போராடிய முருகேசனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த விஜயலட்சுமியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், 3 குழந்தைகளுக்குத் தாயான இளம்பெண் ஒருவரை அவரது கணவரே கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் தர்மபுரி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புரிதல் இல்லாத தம்பதிகள்

சந்தேகம் என்ற பேய் நுழைந்துவிட்டாலே குடும்பங்கள் சிதைந்து போகின்றன.. தம்பதி இருவரும் திறந்த மனதுடன் பேசி சந்தேகத்திற்கான காரணங்களை நேர்மையாக விவாதிப்பது முதல் தீர்வாகும்.. பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கவும், மனக்கசப்பை போக்கவும் தகுந்த மனநல ஆலோசனை பெறுவதும் அவசியம்.. அதைவிட முக்கியமாக, தங்களது சுயநலத்தையும் தாண்டி, உலகமறியா பிஞ்சு குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றியும் இதுபோன்ற கோபக்கார பெற்றோர்கள் கொஞ்சம் யோசிக்கணும்....!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+