தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக.. அட, இங்கேயும் வந்துருச்சா.. ஆச்சரியம் தருமபுரி.. ரேஷன் கடையில் பாருங்க
தருமபுரி: தர்மபுரி மக்களே படுகுஷியில் உள்ளனர்.. ரேஷன் கடையிலும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் ஆரம்பமாகிவிட்டதாம்.
தமிழகத்தின் ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு போன்றவற்றை வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் காக்கப்படுகின்றன.

அதேசமயம், நாடு முழுதும் அதிக ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய கேழ்வரகு, கம்பு உள்ளிட்ட சிறுதானியங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், தமிழக அரசும், ரேஷன் கடைகள் வாயிலாக கேழ்வரகு வினியோகிக்க முடிவு செய்தது.. அந்தவகையில், இதன் முதல் கட்டமாக, நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்படுகிறது.
தர்மபுரி மாவட்டம்: இப்போது, இதே தர்மபுரி மாவட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் முதல் முறையாக அதகப்பாடி பகுதியில் செயல்படும் பகுதிநேர ரேஷன் கடையில் இணையவழி சேவை மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தை பொறுத்தவரை, மொத்தம் 4.68 லட்சம் ரேஷன் கார்டுகளும் 498 முழுநேர ரேஷன் கடைகளும், 586 பகுதிநேர ரேஷன் கடைகளும் உள்ளன.. இதுதவிர தேவைக்கும், ஆங்காங்கே புதிய பகுதிநேர ரேஷன் கடைகள் திறக்கப்படுகின்றன.
செந்தில் நகர்: அந்தவகையில், அதகப்பாடி அடுத்த செந்தில் நகர் பகுதியில் சமீபத்தில்தான்,பகுதிநேர ரேஷன் கடை ஒன்று திறக்கப்பட்டது. அதுபோலவே, 215 ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், செந்தில் நகர் பகுதியில், பகுதி நேர ரேஷன் கடையை சில நாட்களுக்கு முன்பு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
இந்தக்கடையில்தான், தர்மபுரி மாவட்டத்தில், முதல் முறையாக ரேஷன் கடைகளில் வாங்கும் பொருட்களுக்கான பணத்தை, பேடிஎம் க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து, செல்போன் மூலம் ஆன்லைனில் பணத்தை செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ரேஷன் கடைக்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு, ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி வருகின்றனர்.
நிம்மதி: இதனால் ரேஷன் கடையின் ஊழியருக்கான சிரமங்கள் தற்போது குறைந்துள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு சில்லரை தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது போல் உள்ளதாம்.
இன்றைய சூழலில், பெரும்பாலான வர்த்தக மையங்களில் இணைய பணப் பரிவர்த்தனை நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், இப்போது ரேஷன் கடையிலும் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை செந்தில் நகர் பகுதி ரேஷன் அட்டைதாரர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சேவையை மாவட்டத்தில் உள்ள 1,084 ரேஷன் கடைகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சிரமங்கள்: இதுகுறித்து அதிகாரிகள் சொல்லும்போது, "தர்மபுரி மாவட்டத்தில் 1,085 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் இப்போது ஒரு கடையில் மட்டும், முதல் கட்டமாக அதகப்பட்டி அடுத்த செந்தில்நகர் ரேஷன் கடையில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த, க்யூஆர் கோட் ஸ்கேன் செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
இனி படிப்படியாக அனைத்து ரேஷன் கடைகளிலும், இணையவழியில் பணம் செலுத்தும் வசதி விரிவாக்கம் செய்யப்படும். இதனால் கார்டுதாரர்களின் சிரமம் குறைவதுடன், கடையின் ஊழியர்களுக்கும் எளிதாக விடும். ஊழியர்கள் வங்கிக்கு எடுத்துச்சென்று செலுத்தும் சிரமம் குறையும்" என்றனர்.
காஞ்சிபுரம்: முன்னதாக, தமிழ்நாட்டிலேயே, முதல் முறையாக நியாய விலை கடைகளில் வாங்கப்படும் பொருட்களுக்கு பொதுமக்கள் பணவர்த்தனை செய்ய க்யூ ஆர் கோடு மூலம் பணத்தை செலுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட டெம்பிள் சிட்டியில் உள்ள M.VM.P நியாய விலை கடையில் க்யூ ஆர் கோடு மூலம் பணவர்த்தனை செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications