இதய நோயினால் அவதிப்படும் 2 வயது சிறுமி பிருந்தா உயிர் பிழைக்க உதவுங்களேன்
தருமபுரி: இதயநோயால் பாதிக்கப்பட்டுள்ள 2 வயது குழந்தை பிருந்தாவின் சிகிச்சைக்கு நல்ல உள்ளம் கொண்டவர்களின் உதவியை எதிர்பார்த்து பெற்றோர் காத்துக் கிடக்கிறார்கள்.
தருமபுரியை சேர்ந்தவர் சண்முகம் (31). இவரது மனைவி சத்யா (31). இவர்கள் முறையே 10 மற்றும் 8 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்கள். இதில் சண்முகம் கட்டட கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். அவரது மனைவி சத்யா தையல் வேலை செய்து வருகிறார்.

இவர்களுக்கு ஷிவானி (7), ஹஸ்மிதா (5) , பிருந்தா (2) ஆகிய குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பிருந்தா பிறக்கும் போதே இதயத்தையும் நுரையீரலையும் கட்டுப்படுத்தும் விலா எலும்புகள் வளர்ச்சி குன்றி பிறந்தார். ஆனால் அப்போது எந்தவித ஆபத்தும் இல்லாமல் இருந்தது.
ஆனால் அக்குழந்தை வளர வளர பசி மற்றும் ஜீரண பிரச்சினையால் அவதியுறுகிறார். அவர் உண்ணும் உணவு உடனடியாக ஜீரணமாகி விடுகிறது. ஒரு வாய் உணவை கூட அவரது உறுப்புகளால் சேமித்து வைக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அக்குழந்தை சென்னை மியாட் மருத்துவமனைக்கு சொந்தமான CHIME அறக்கட்டளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்டது. அதில் விலா எலும்புகளின் வளர்ச்சி குறைந்து காணப்படுவதாலும் அங்கு ஒரு ஓட்டை இருப்பதாலும் குழந்தையின் இடது புற நுரையீரல் மற்றும் இதயத்தில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு மூச்சுவிட சிரமம் உள்ளது.
அவ்வப்போது மார்பு வலியால் துடிக்கிறார். அவருக்கு அந்த ஓட்டையை சரி செய்ய ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இதற்கு ரூ 3 லட்சம் தேவைப்படுகிறது. ஏழை பெற்றோர்களால் அத்தகைய பணத்தை செலவிட முடியாத நிலை உள்ளது.

எனவே நல்லுள்ளம் கொண்டவர்கள் குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு! ஒரே நாளில் தீர்வு.. சென்னைக்கு குஷி -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications