டெலிவரி பாய்ஸ், வீட்டு பணிவேலை செய்வோரா? உங்களுக்கும் பிஎஃப் இருக்கே! விண்ணப்பிப்பது எப்படி?
தருமபுரி: ஆன்லைனில் ஆர்டர் பெறப்பட்டு விற்பனை செய்யும் தொழிலாளர்களும் ஈஎஸ்ஐ மற்றும் பிஎஃப் திட்டத்தில் பயன்பெறலாமே! எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் தொழிலாளர்கள் நல வாரியத்தில் இணையம் சார்ந்த தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் (GIG) (Delivery Boys) (ஆன்லைனில் ஆர்டர் பெறப்பட்டு விற்பனை செய்யப்படும்) மற்றும் வெளி மாநில கட்டுமானத் தொழிலாளர்கள் (ISM- Inter State Migrant Workers) மற்றும் வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் (DOME Domestic Workers) மேற்படி தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களை அதிகளவில் பதிவு செய்வதற்கு ஏதுவாக தருமபுரி தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்தில் வாரந்தோறும் வெள்ளிக் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் மேற்கண்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு 19 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்கள் மட்டும் உறுப்பினர்களாக பதிவு செய்துக்கொள்ளலாம். மேலும், ESI/PF பிடித்தம் இல்லாதவர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
மேலும் விண்ணப்பிக்க வரும்போது வயதிற்கான ஆவணம், (குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, பள்ளி மதிப்பெண் சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று) ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், புகைப்படம், நியமனதாரருக்கான ஏதேனும் ஒரு அடையாள அட்டை மற்றும் தொழிலாளர்கள் பணிபுரியும் அடையாள அட்டை ஆகிய அசல் ஆவணங்களுடன் அலுவலகத்திற்கு நேரில் வந்து சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களான பதிவு செய்து அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் (கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம்) பெற்று பயனடையலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ஊழியர்களின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதில் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதாவது EPFO முக்கிய பங்காற்றுகிறது. பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ.50,000 இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் ஊதியத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதன் மூலம், ஓய்வுக்கு பிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். இது ஊழியர்களின் முதுமை காலத்தில் யார் தயவையும் நாடாமல் கவுரவமாக வாழ வழிவகுக்கிறது. ஊழியர்கள் பணியின் போதும் இந்த பணத்தை எடுத்துக்கொள்ளலாம். பலருக்கு EPFO விதிகளின்படி லாயல்டி-கம்-லைஃப். இதன் மூலம் பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்கள் ரூ.50,000 வரை இலவசமாக பெறலாம்.
அதாவது, பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும்போதும் அதே பிஎஃப் கணக்கில் பங்களிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 20 ஆண்டுகள் ஒரே பிஎஃப் கணக்கில் பங்களித்த பிறகு லாயல்டி-கம்-லைஃப் திட்டத்தின் பலன்களைப் பெற தகுதி உடையவர்கள் ஆவர். 20 ஆண்டுகளாக ஒரே பிஎஃப் கணக்கை பயன்படுத்தி வருபவர்களுக்கு கூடுதலாக ரூ.50,000 கிடைக்கும்.
-
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
அடிச்ச வெயிலுக்கு.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! கொட்டப்போகும் மழை! -
மழையும் இருக்கு.. வெயிலும் இருக்கு.. குழப்பி அடிக்கும் வானிலை! உஷார் மக்களே! -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது












Click it and Unblock the Notifications