‛‛என் கண்முன் தெரியுது’’.. தர்மபுரியில் வெல்வாரா சவுமியா அன்புமணி? குறிசொன்ன சாமியாடி.. அரண்ட பாமக
தர்மபுரி: தர்மபுரியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பாமக வேட்பாளரான சவுமியா அன்புமணி சென்றார். அப்போது திடீரென்று இளைஞர் அருள் வந்து சாமியாடியதால் பாமகவின் ஷாக்காகினர். மேலும் கையில் எலுமிச்சைப்பழம் வைத்து கொண்டு கோவிலில் தரிசனத்துக்கு வந்த சவுமியா அன்புமணிக்கு தேர்தல் வெற்றி தொடர்பாக குறிச்சொல்லி பரபரப்பபை ஏற்படுத்தினார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 4 முனை போட்டி உள்ளது.

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிகள் இடையே போட்டி உள்ளது. இதுதவிர சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
இந்த லோக்சபா தேர்தலில்பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது. பாஜக கூட்டணியில் பாமகவுக்கு மொத்தம் 10 லோக்சபா தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், காஞ்சிபுரம் என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தர்மபுரி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடவில்லை.
மாறாக தர்மபுரியில் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா அன்புமணி களமிறங்கி உள்ளார். முதலில் இந்த தொகுதியில் அரசாங்கம் என்பவர் பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு அரசாங்கம் மாற்றப்பட்டு சவுமியா அன்புமணி வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தொகுதியில் சவுமியா அன்புமணி தீவிரமாக ஓட்டு சேகரித்து வருகிறார். சவுமியா அன்புமணிக்கு சாதகமாக பாமகவினர் தர்மபுரியில் முகாமிட்டு தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் சவுமியா அன்புமணி தர்மபுரியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலக்கு சென்று தரிசனம் செய்தார். அப்போது இளைஞர் ஒருவர் திடீரென்று அருள் வந்து சாமியாடினார்.

ஆஞ்சநேயர் கோவிலில் பூஜை நடந்தபோது சன்னத்தியின் வாசலில் முழங்காலிட்டப்படி கையில் எலுமிச்சைப்பழம் வைத்தபடி சாமியாடியதால் பாமகவின் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அந்த இளைஞர் சவுமியா அன்புமணிக்கு அருள்வாக்கு கூறினார். அப்போது அவர், ‛‛நீங்கள் வெற்றி பெற்று நாடாளுமன்ற எம்பியான பிறகு திரும்பி சன்னத்துக்கு வந்து பூஜை செய்ய வேண்டும் தாயே. உன்னுடைய கனி வெற்றி பெற்றுவிட்டது தாயே.
உன் வெற்றி என் கண் முன் தெரிகிறது. நீ நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவாய். நிச்சயமாக நடக்கும். நீ ஏற்றுக்கொண்டிருக்கிற இந்த தாய் உன்னை காப்பாற்றி தருவாள். உன்னுடைய வெற்றி நிச்சயம் நடக்கும். மக்கள் உன்னை ஏற்றுக்கொண்டு விட்டார்கள்'' என கூறினார். மேலும் எலுமிச்சை பழத்தை வாயில் வைத்து சாமியாடி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தர்மபுரி தொகுதியில் பாமகவுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. கடந்த 2014 தேர்தலில் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றார். அதன்பிறகு கடந்த 2019 தேர்தலில் அன்புமணி ராமதாஸ், திமுக வேட்பாளர் செந்தில் குமாரிடம் தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் திமுகவின் செந்தில் கமார் 5 லட்சத்து 74 ஆயிரத்து 988 ஓட்டுகள் பெற்றார். அன்புமணி ராமதாஸ் 5 லட்சத்து 4 ஆயிரத்து 235 ஓட்டுகள் மட்டுமே பெற்று 70,753 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
தற்போது நடைபெற உள்ள தேர்தலில் சிட்டிங் எம்பியாக உள்ள செந்தில் குமாருக்கு திமுக வாய்ப்பு வழங்கவில்லை. மாறாக திமுக சார்பில் ஏ. மணி என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார். பாஜக கூட்டணியில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் மனைவி சவுமியா அன்புமணி, அதிமுக சார்பில் ஆர் அசோகன், சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பொன்னிவளவன் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications