தருமபுரி இளவரசன் மரணம் தற்கொலையே.. நீதிபதி சிங்காரவேலன் கமிஷன் அறிக்கையில் தகவல்!
தருமபுரி: தனது காதல் மனைவி திவ்யா தன்னை பிரிந்து சென்றதால் மனமுடைந்து இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக சிங்காரவேலன் கமிஷன் அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாயைச் சேர்ந்தவர் பட்டியலின இளைஞர் இளவரசன். அதே பகுதியில் வேறு சமூகத்தைச் சேர்ந்த திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனால் மனமுடைந்த திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இரு தரப்பினரிடையே வன்முறை வெடித்தது. வீடுகளுக்கு தீவைத்தல் போன்ற சம்பவங்களும் நடந்தன.

இளவரசன்
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக திவ்யா கூறியதை அடுத்து அவர் தாய் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். இதையடுத்து கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4-ஆம் தேதி தருமபுரி அரசு கலைக் கல்லூரி பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கமிஷன்
அவரை யாரோ கொலை செய்து தண்டவாளத்தில் வீசிவிட்டதாக கருத்துகள் எழுந்தன. இதையடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா நீதிபதி சிங்காரவேலன் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்து உத்தரவு பிறப்பித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
இந்த ஆணையம் இளவரசன் மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினரை விசாரணை செய்தது. இந்த நிலையில் 5 ஆண்டுகள் முடிவுக்கு பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் சிங்காரவேலன் ஆணையம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அறிக்கையை அளித்தது.

அறிக்கை கூறுவது என்ன
ஆனால் அந்த அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் சிபிசிஐடி விசாரணையின் தகவல்களை வைத்து இளவரன், திவ்யா பிரிந்து சென்ற மனவருத்தத்தில் ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இது சிபிசிஐடி விசாரணையின் அடிப்படையிலும் இளவரசனின் இரு பிரேத பரிசோதனைகளின் அடிப்படையிலும் முடிவு செய்யப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications