Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிச்சைக்காரர்களுக்குத் தான் இலவசம் வேண்டும்... கமல் கொந்தளிப்பு!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு கோடிக்கணக்கான பணத்தை விற்றுவிடாதீர்- கமல்ஹாசன்- வீடியோ

    தருமபுரி: பிச்சைகாரர்களுக்குத் தான் இலவசம் வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் மக்கள் மத்தியில் கமல் பேசியதாவது:

    சினிமாத்துறையில் இருந்த நான் எதார்த்த வாழ்வியலை நம்பி அரசியலுக்கு வந்திருக்கிறேன். மக்களை நம்பித் தான் நான் அரசியல் களத்திற்கு வந்திருக்கிறேன். மக்கள் நிச்சயம் என்னை கரை சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன்.

    மக்களின் ஆதரவு தேவை

    மக்களின் ஆதரவு தேவை

    வணிகர்களை நம்பியே நாட்டின் பொருளாதாரம் இருக்கிறது, அவர்களே நாட்டின் முதுகெலும்பு. வாக்களிக்க பணம் வாங்க மாட்டேன் என்று பெரும்பாலான மக்கள் என்னுடைய முதல் முயற்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதே போன்று மக்களின் ஆதரவு கிடைத்தால் தமிழகத்தில் என்னால் நல்ல மாற்றத்தை கொண்டு வர முடியும்.

    நீர்நிலைகளை காப்பாற்றுங்கள்

    நீர்நிலைகளை காப்பாற்றுங்கள்

    தீவிர மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்துவது கடினம். எனினும் படிப்படியாக அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாப்பது நமது கடமை. நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டி மாசு படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    கஜானாவில் யார் பணம்

    கஜானாவில் யார் பணம்

    உழைக்கும் மக்களின் பணம் தான் அரசின் கஜானாவை நிரப்புகிறது. அதை அரசியல்வாதிகள் இலவசம் என்ற பெயரில் எடுத்து காலி செய்கிறார்கள். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகின்றன.

    பிச்சைக்காரர்களுக்குத் தான் இலவசம் வேண்டும்

    பிச்சைக்காரர்களுக்குத் தான் இலவசம் வேண்டும்

    மக்களின் பணத்தை ஊழல்கள் மூலமாக கொள்ளையடித்து அதில் ஒரு பகுதியை தேர்தலின்போது ஓட்டுக்களை பெறுவதற்காக மக்களுக்கே திருப்பி கொடுக்கும் கலாசாரம் பரவி விட்டது. இந்த கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர மக்கள் நீதி மய்யம் போராடும். பிச்சைக்காரர்களுக்கு தான் இலவசம் தேவை. உழைக்கும் மக்களுக்கு தேவையற்ற இலவசங்கள் வேண்டாம். இந்த கொள்கைக்கு பொதுமக்கள் உரிய ஆதரவு அளிக்க வேண்டும்

    தேர்தலை சந்திப்போம்

    தேர்தலை சந்திப்போம்

    பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்கு தனிப்படை அமைக்க உள்ளோம். அந்தப் படையில் பொதுமக்களையும் இடம்பெறச் செய்வோம்.
    மேலும் தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் நடக்கும் என்று தெரியவில்லை. இதே போன்று உள்ளாட்சித் தேர்தலும் எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. எந்தத் தேர்தல்கள் வந்தாலும் மக்கள் நீதி மய்யம் நிச்சயமாக போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+