ஒற்றை காட்டு யானையிடமே.. போதையில் வம்பிழுத்த மீசை முருகேசன்.. தட்டி தூக்கிய வனத்துறை !
தர்மபுரி: போதையில் ஒற்றை காட்டு யானையை வம்பு இழுத்த மீசை முருகேசனை தர்மபுரி வனத்துறையினர் தட்டி தூக்கி உள்ளனர். ஒகேனக்கல் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
பொதுவாக விலங்குகள் மனிதர்கள் போல் யோசிக்காமல் உரிமையாளரையே தாக்கும். மேலும் அருகில் யார் இருந்தாலும் அது பார்க்காது. பாசத்தை காட்டினாலும் கோபத்தில் ஏதாவது செய்து விடும். குறிப்பாக வனவிலங்குகள் என்ன வேண்டுமானாலும் செய்யும்.

அதிலும் குறிப்பாக மூர்க்கத்தன்மை யானையோ மதம் பிடித்தால் அருகிலிருப்பவர்கள் யார் என்ன என்று கூட கவனிக்காது. தூக்கி போட்டு மிதித்து கொன்றுவிடும். பாகன் முதல், அருகில் இருந்து பார்ப்பவர்கள் வரை என பல உயிர்களும் யானை மூலம் பலியாகி வருகிறது. இதனால் தான் வனத்துறை அதிகாரிகள் யானைகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் போதை ஆசாமி ஒருவர், யானை முன் நின்று வம்பிழுப்பது போல் செய்கைகள் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ பரவியது. அவரை தற்போது கைது செய்துள்ளனர். அதாவது தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக தண்ணீர் தேடி அவ்வப்போது பென்னாகரம் - ஒகேனக்கல் செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்ட தண்ணீர் வால்வுகளில் இருந்து வெளியேறும் நீரை குடித்துவிட்டு சாலையின் அருகில் நிற்கும்.
தற்போது ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு கோடை விடுமுறையை கொண்டாட நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
பென்னாகரத்தில் இருந்து சில கிலோமீட்டர் அடர் வானப்பகுதிக்குள் செல்லும் போது யானைகள் தென்படும். இந்நிலையில் நேற்று கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை காட்டு யானை சாலையோரம் நின்றதை கண்ட மீசைக்கார சுற்றுலா பயணி ஒருவர் மது போதையில் யானைக்கு மிக அருகில் சென்று நின்று சாமி கும்பிடுவதும், மண்ணை தொட்டு கும்பிடுவதும், கையை தூக்கி போஸ் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார் .
அப்போது அந்த ஒற்றைக் காட்டு யானை தாக்குவது போல் மிரட்டியும் கூட கண்டு கொள்ளமால் மது போதையில் அங்கேயே நின்று கொண்டிருந்தார்.
அப்போது ஒகேனக்கலுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு ஒருவர் அந்த நபரின் செயலை தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி கண்டனங்களை குவித்த நிலையில், அந்த நபர் யார் என்ன என்று வனத்துறையினர் விசாரித்தனர்.
அப்போது அது பென்னாகரம் அருகே எட்டி குட்டை பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பது தெரியவந்தது. இதையடுத்து பென்னாகரம் வனத்துறையினர் யானையிடம் வம்பிழுத்த மீசை முருகேசனை அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications