சோளக்காட்டுக்குள் நடு ராத்திரி.. முனகல் சத்தம்.. பழனி மனைவியும் ஆறுமுகமும்.. துப்பாக்கி சூடு.. பலி!
பன்றி என நினைத்து தவறுதலாக சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார்
Recommended Video
தர்மபுரி: சோளக்காட்டுக்குள் ராத்திரியில் காதல் ஜோடியின் முனகல் சத்தம் கேட்டு கொண்டே இருந்தது. இதனால், காட்டுப்பன்றிகள் வந்துவிட்டன என நினைத்து அந்த ஜோடி மீது துப்பாக்கியால் சுட்டுவிட, அதில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகேயுள்ள உலகளஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். 40 வயதாகிறது. டிராக்டர் டிரைவர். கல்யாணம் ஆகி 2 மகன்கள் இருக்கிறார்கள்.
இவர், கடந்த 8ம் தேதி சிக்குமாரண்டஅள்ளி பகுதியில் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். யார் இவரை கொன்றது என்று தெரியவில்லை. கை, கால், பாகங்கள் தனித்தனியாக கிடந்தன. ரயில்வே போலீசாரும் இது சம்பந்தமாக விசாரித்துவந்தனர்.

துப்பாக்கி குண்டு
இதனிடையே போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்தது. அதில், ஆறுமுகம் உடம்பில் துப்பாக்கி குண்டின் சிதறல் இருக்கவும் சந்தேகம் வலுத்தது. துப்பாக்கி குண்டு பாய்ந்தள்ள நிலையில், தண்டவாளத்தில் எப்படி வந்து இறந்தார் என்பதை அறிய விசாரணை தீவிரமானது. இதன் அடிப்படையில்தான், அந்த பகுதியின் விவவசாய தோட்ட உரிமையாளர் சண்முகம் என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. அதனால் அவரிடம் விசாரித்ததில் ஆறுமுகத்தை துப்பாக்கியால் சுட்டது தான்தான் என ஒப்புக் கொண்டார்.

வாக்குமூலம்
அப்போது அவர் போலீசாரிடம் சொன்னதாவது: சொந்தமாக சோளக்காடு உள்ளது. என் தோட்டத்தில், நிலக்கடலை பயிரிட்டு இருக்கிறேன். அதனால், காட்டு பன்றிகள் அடிக்கடி வந்து தொந்தரவு செய்துவிடும். இதுக்காகவே நைட் நேரத்தில் துப்பாக்கியுடன் காட்டுக்குள் காவல் இருப்பேன். சம்பவத்தன்று கூட நாட்டுத்துப்பாக்கியுடன் சென்றேன்.

ஐயோ.. அம்மா...
அந்த நேரத்தில் செடிகளுக்கிடையே இருந்து முனகல் சத்தமாக கேட்டது. காட்டுப்பன்றிகள்தான் திரும்பவும் வந்து, பயிர்களை நாசம் செய்கின்றன என்று நினைத்து, சத்தம் கேட்ட திசையை பார்த்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டேன். அப்பதான் ஐயோ, அம்மான்னு அலறல் வரவும் ஓடிப்போய் கிட்ட சென்று பார்த்தேன். நான் சுட்ட குண்டு ஆறுமுகம் தலையில் பட்டு ரத்தம் கொட்டி கொண்டிருந்தது.

ஆறுமுகம்
அவருக்கு பக்கத்தில் பழனியின் மனைவி ராதா வலியால் துடித்து கொண்டிருந்தார். அவருடைய இடுப்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தது. இதை பார்த்து நான் பதறினேன். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே ஆறுமுகம் இறந்துவிட்டார். பழனி பொண்டாட்டி, இந்த நேரத்துல இங்கே என்ன செய்யறாங்க என்று விழித்தேன். அப்பதான் இவர்கள் கள்ளக்காதல் ஜோடி என்றும், உல்லாசமாக இருக்க இந்த காட்டுக்குள் புகுந்துவிட்டனர் என்றும் தெரிந்தது.

சத்தியம்
என்ன செய்வதென்றே புரியாமல், என் சொந்தக்காரர் சின்னசாமியை வரவழைத்து, ஆறுமுகம் உடலை தண்டவாளத்தில் தூக்கி போட்டோம். ரயில் மோதி இறந்துவிட்டதாக நம்பிவிடுவார்கள் என்று நினைத்தோம்" என்றார். இந்த கொலையை தன் கணவனிடம் சொல்லிவிடக்கூடாது என்று பழனி மனைவி ராதா சத்தியம் வாங்கிவிட்டாராம். அதனால்தான் சண்முகம், ராதா என ஒருத்தரும் ஆறுமுகம் இறந்ததை பற்றி மூச்சுவிடக் காணோம்.

3 பேர் கைது
இதையடுத்து, சண்முகம், சின்னசாமி, பழனி மனைவி ராதா என 3 பேரையுமே போலீசார் கைது செய்துள்ளனர். இதில், ராதாவுக்கு தீவிர சிகிச்சை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்து வந்தாலும், போலீஸ் கண்காணிப்பு தீவிரமாக இருந்து வருகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications