அஸ்திரத்தை கையிலெடுக்கும் பாமக.. "விரைவில் மெகா கூட்டணி".. அன்புமணி உறுதி
தருமபுரி: தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே கோரி 17 இல் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். திமுக தவிர மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்றும், விரைவில் மெகா கூட்டணி அமைக்கப்படவுள்ளதாகவும், வரும் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் பாமக நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி பட்டியலின மக்களுக்கு அரசு டெண்டரில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. சமூக பொருளாதார முன்னேற்றம் அடைவதற்கு என்னென்ன வழிவகைகள் உள்ளதோ, அதனை கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே கொண்டு வர முடியும். கர்நாடகவில் பட்டியலின சமூகத்தினருக்கு 17 விழுக்காட்டை 6, 6, 5 என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். இதுதான் மிகவும் அவசியமானது.

தமிழ்நாட்டில் பி.சி.யில் 140 சமுதாயம் உள்ளது. அதில், 26.5 விழுக்காடு இடஒதுக்கீடு உள்ளது. அதனை 5, 6, 8 என்று உட்பிரிவுகளாகப் பிரித்து யாருக்கு கிடைக்கவில்லையோ அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். பட்டியலின மக்களுக்கு 18 விழுக்காடு இடஒதுக்கீடு உள்ளது. அதில், 3 விழுக்காடு அருந்ததியருக்கு வழங்கப்படுகிறது. மீதி உள்ள 15 விழுக்காட்டை 5 பிரிவுகளாகப் பிரித்து யாருக்கு கிடைக்கவில்லையோ அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
எஸ்டி பிரிவில் பழங்குடி மக்களுக்கு 1 விழுக்காடு வழங்கப்படுகிறது. அதனை இரண்டாகப் பிரிக்க வேண்டும். அவ்வாறு பிரித்து கணக்கெடுப்பு நடத்தி விவரங்களை அறிந்து கொண்டு இடஒதுக்கீடு, சமூக திட்டங்களைக் கொடுத்தால் தான் தமிழ்நாடு வேகமாக வளரும். அந்த நோக்கத்தைக் கொண்டு, டிசம்பர் 17 ஆம் தேதி தமிழகத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் சமீபத்தில் நகராட்சித் துறையில் 888 கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்றது என்று அமலாக்கத் துறை 232 பக்க அறிக்கையை தமிழக காவல் துறைக்கு அனுப்பியுள்ளது. அதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆட்கள் தேர்வின்போது ஒரு வேலைக்கு 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை என 2,500 காலிப் பணியிடங்களுக்கு 888 கோடி ரூபாய் வந்ததாகவும், அந்தப் பணம் ஹவாலா மூலமாக வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அறிக்கை கொடுத்துள்ளது.
ஆனால், இந்த விவகாரத்தில் இதுவரை தமிழக அரசு சார்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், இந்த செய்தி எப்படி வெளியே போனது என்று விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இது வெட்கக்கேடானது. மிகவும் அவமானமாக உள்ளது. எதற்கு உங்களுக்கு ஆட்சி. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உங்களுக்கு துப்பில்லை.
திமுக அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் 66 வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. வெறும் 13 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றிய திமுகவிற்கு மக்கள் மீண்டும் வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள். அதேபோல, மணல் கொள்ளை, டாஸ்மாக் ஊழல் என எல்லாவற்றிலும் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். விரைவில் மெகா கூட்டணி அமைக்கப்படும். எங்கள் கூட்டணி தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறும். உறுதியாக திமுக படுதோல்வி அடையும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications