மேல கை வைக்கிறார்.. மிரட்டுகிறார்.. மாணவிகள் கண்ணீர்.. பள்ளி தலைமை ஆசிரியர் அதிரடி கைது!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்
Recommended Video
தருமபுரி: "மேல கை வைத்து பேசுகிறார்.. வெளியே சொன்னால் டிசி தந்துடுவேன்னு மிரட்டுகிறார்" என்று பள்ளி மாணவிகள் பெற்றோரிடம் முறையிட.. பெற்றோர்களோ பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் அருகே உள்ளது பூச்சூர் கிராமம். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 140 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.இந்நிலையில், தலைமையாசிரியர் சுப்பிரமணி மீதுதான் இப்போது புகார் எழுந்துள்ளது. இவருக்கு வயது 53 ஆகிறது.
பத்தாம் வகுப்பு மாணவிகளிடம் சுப்பிரமணி தகாத முறையில் நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. மாணவிகளின் மேல் கை வைத்து பேசுகிறார் என்றும், கை வைக்க வேண்டாம் என்று சொன்னாலும் சுப்பிரமணி கேட்பதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. ஸ்கூலில் நடப்பதை பற்றி வீட்டில் சொன்னால், டிசி கொடுத்து அனுப்பிவிடுவதாக மிரட்டுகிறாராம் சுப்பிரமணி.

சுப்பிரமணி
இதனால் மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ந்த பெற்றோர், பள்ளிக்கு வந்து, தலைமையாசிரியர் சுப்பிரமணியை எச்சரித்தும் சென்றுள்ளனர். இருந்தாலும் மீண்டும் அதேபோல மாணவிகளிடம் சுப்பிரமணி நடந்து கொண்டுள்ளார்.

போலீசார்
இதை கேள்விப்பட்ட பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டுள்ள விவகாரம் அறிந்து விரைந்து வந்த போலீசார், சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், சுப்பிரமணியை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும், கைது செய்ய வேண்டும் என்று முழக்கம் எழுப்பினர்.

கைது
இதையடுத்து, பள்ளி மாணவிகளிடம் விசாரணை நடத்திய போலீசார், ஏரியூர் ஸ்டேஷனுக்கு சுப்பிரமணியனை கைது செய்து அழைத்து சென்று, தீவிர விசாரணை நடத்தினர். பின்னரை, சம்பந்தப்பட்ட மாணவிகளும், அவர்களது பெற்றோரும் பென்னாகரம் அனைத்து மகளிர் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர்.

நீதிமன்ற காவல்
அதன்படி, சுப்பிரமணி போக்சோவில் கைது செய்யப்பட்டு, பென்னாகரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 12-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து, சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இந்நிலையில், கைதான தலைமை ஆசிரியை சுப்பிரமணியை பணியிடை நீக்கம் செய்து தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (பொறுப்பு) கணேசமூர்த்தி நடவடிக்கை எடுத்து உள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications