தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் சாகா பயிற்சி “அனுமதித்தது யார்?”- கொதித்த சமூக ஆர்வலர்கள்.. சிஇஓ ரெய்டு!

Google Oneindia Tamil News

தருமபுரி : தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆர்எஸ்எஸ் சாகா பயிற்சி முகாம் நடைபெற்று வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    தமிழக பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் சாகா பயிற்சி “அனுமதித்தது யார்?”- கொதித்த சமூக ஆர்வலர்கள்

    இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், முதன்மைக் கல்வி அலுவலர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கே சென்று ஆய்வு நடத்தி, பள்ளி நிர்வாகத்தை எச்சரித்துள்ளார்.

     மோடி, அமித்ஷாவின் புதிய சாதனை.. இத யாரும் கண்டுக்கலயே! - திரிணாமூல் எம்.பி.யின் வஞ்சப் புகழ்ச்சி மோடி, அமித்ஷாவின் புதிய சாதனை.. இத யாரும் கண்டுக்கலயே! - திரிணாமூல் எம்.பி.யின் வஞ்சப் புகழ்ச்சி

    அந்தப் பள்ளியின் தாளாளர் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியாக இருப்பதால் சாகா பயிற்சியை பள்ளியில் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

     ஆர்.எஸ்.எஸ் பயிற்சி

    ஆர்.எஸ்.எஸ் பயிற்சி

    ஆர்.எஸ்.எஸ் எனப்படும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் அமைப்பு இந்துத்துவ கொள்கை கொண்டவர்களால் தொடங்கப்பட்ட இயக்கம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் கிளைதான் பா.ஜ.க. பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தங்களை செயல்படுத்தும் வகையிலேயே ஆட்சி நடத்தி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சாகா எனும் பயிற்சி அணிவகுப்பு நடத்தி, தமது மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறது. இந்த பயிற்சி முகாமில் ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    தருமபுரியில்

    தருமபுரியில்

    இந்நிலையில், தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் சாகா பயிற்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2 வாரங்களாக நடைபெறும் இந்தப் பயிற்சியில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு யோகா, உடற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளோடு மதம் சார்ந்த பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    தனியார் பள்ளியில்

    தனியார் பள்ளியில்

    பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் நடத்தப்படுவதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாகா பயிற்சிக்கு அனுமதி கொடுத்தது யார் என்றும், பள்ளிகளில் இதுபோன்ற மத ரீதியான பயிற்சிகளை அளிக்க அனுமதி உள்ளதா என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.

     சி.இ.ஓ ரெய்டு

    சி.இ.ஓ ரெய்டு

    இந்த விவகாரம் சர்ச்சைக்கு உள்ளானதை தொடர்ந்து, தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ஆர்.எஸ்.எஸ் சாகா பயிற்சி நடைபெற்ற பாலக்கோடு தனியார் பள்ளிக்கு பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். மேலும், பள்ளி வளாகத்தில் இதுபோன்ற ஆர்எஸ்எஸ் பயிற்சி நடத்தப்பட்டால், பள்ளிக் கல்வி விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    அனுமதி பெறவில்லை

    அனுமதி பெறவில்லை

    பாலக்கோடு அருகே உள்ள இந்த தனியார் பள்ளியில் நடைபெறும் பயிற்சிக்கு காவல்துறையின் முன் அனுமதி பெறப்படவில்லை என்றும், பள்ளியின் தாளாளராக இருக்கும் கோவிந்தராஜ் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாவட்ட செயலாளராக இருப்பதால் சாகா பயிற்சியை பள்ளியில் நடத்திக்கொள்ள அவர் அனுமதி வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    சர்ச்சைகள்

    சர்ச்சைகள்

    மத வெறுப்பைத் தூண்டும் சாகா பயிற்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜனநாயக அமைப்புகள், சமூல ஆர்வலர்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடைபெற்றுள்ளன. இந்தப் பயிற்சி முகாம் நடைபெறும் போதெல்லாம் சர்ச்சைகளும் தொடர்ந்து வந்திருக்கிறது. இந்நிலையில், மீண்டும் ஆர்.எஸ்.எஸ் சாகா பயிற்சி முகாம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    RSS saga held at a private school near Palacode in Dharmapuri district has caused controversy. It has been reported that given school's correspondent given permission to conduct RSS saga.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X