தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கத்திரிக்காய் விற்க போனாகூட பணத்தை பிடிச்சு வச்சுக்கும்.. அதுக்குபேர் என்ன தெரியுமா.. சீமான் விளாசல்

அரூர் பிரச்சாரத்தின்போது தேர்தல் கமிஷனை சீமான் சரமாரி விமர்சித்துள்ளார்.

Google Oneindia Tamil News

தருமபுரி: ''இதுக்கு பேர் வெச்சிருக்காங்க.. என்னன்னு தெரியுமா? தேர்தல் கமிஷன்..ன்னு ஏன்? கமிஷன்.. அதிலேயே இருக்கு.. கத்தரிக்காய் விற்க போனாக்கூட அவங்க பணத்தை பிடிச்சு வெச்சுக்கும்" என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. வேட்பாளர்களை அறிவித்ததில் இருந்தே நாம் தமிழர் கட்சி அமர்க்களப்பட்டு வருகிறது.

அதிலும் சீமான் பேச்சு என்றாலே சும்மாவே கூட்டம் கூடும்.. இப்போது பிரச்சாரம் என்பதால் களை கட்டுகிறது. திமுக, அதிமுக என ஒரு கட்சியையும் சீமான் விட்டு வைப்பதில்லை.

ஸ்டாலின் முதல்வராக முடியாது.. ராகுல் பிரதமராக முடியாது... தமிழிசை ஆருடம்ஸ்டாலின் முதல்வராக முடியாது.. ராகுல் பிரதமராக முடியாது... தமிழிசை ஆருடம்

அரூர் பிரச்சாரம்

அரூர் பிரச்சாரம்

எல்லாரையுமே ஒரு பிடி பிடித்து வருகிறார். இப்போது ஒருபடி மேல போய் தேர்தல் பறக்கும் படை குறித்து விமர்சித்துள்ளார். தருமபுரி தொகுதியில் வேட்பாளரையும் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி இடைத்தேர்தல் வேட்பாளரையும் ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார்.

தேர்தல் கமிஷன்

தேர்தல் கமிஷன்

அப்போது அவர் பேசியதாவது: ''இதுக்கு பேர் வெச்சிருக்காங்க.. என்னன்னு தெரியுமா? தேர்தல் கமிஷன்..ன்னு ஏன்? கமிஷன்.. அதிலேயே இருக்கு.. அதிலேயே புரிந்துகொள்ளலாம்.

வேடிக்கை பார்க்குது

வேடிக்கை பார்க்குது

இந்த பறக்கும் படை என்ன செய்கிறது? கத்தரிக்காய் விற்க போகிறவர், மளிகைக்கடைக்கு போகிறவர், அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்துட்டு அதுக்கு பணம் கட்ட போறவர், இப்படி இவ்வளவு பேரின் பணத்தையும் பிடித்து கொள்கிறது. ஆனா, ஓட்டுக்கு காசு தந்துட்டு இருக்கிறவரை அமைதியா ஒரு ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டு இருக்கும்.

நல்லாட்சி

நல்லாட்சி

இது ஒரு கேடு கெட்ட தேர்தல் ஆணையம்.. ஓட்டுக்கு பணம் தந்தா யாரும் வாங்காதீங்க.. நாடு போராட்டகளமாக மாறி கொண்டிருக்கிறது.. இந்த நேரத்தில் நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருப்பதாக ஆட்சியாளர்கள் சொல்வது மக்களை ஏமாற்றும் முயற்சி.. நேர்மையான, சிறந்த தலைவர்களை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்'' என்று ஆவேசமாக பேசினார்.

English summary
Naam Thamizhar Party Seeman has criticized the Election Commission in Aroor Meeting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X