மனதை புண்படுத்திட்டார்.. எம்பி செந்தில் குமார் மீது நடவடிக்கை தேவை.. பிராமண சமாஜ சங்கம் கண்டனம்!
தர்மபுரி: பூமி பூஜை விழாவில் ஆன்மீகத்திற்கு எதிராக செயல்பட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாருக்கு தமிழ்நாடு பிராமண சமாஜ சங்கம் சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு பிராமண சமாஜ சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு பிராமண சமாஜத்தின் மாநில தலைவர் அரிஹர முத்து ஐயர் கலந்து கொண்டு சங்கத்தின் தீர்மானங்கள் ஆகியவற்றை விளக்கி உரையாற்றினார். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சனாதன தர்மம்
இதனையடுத்து சங்கத்தின் மாநில தலைவர் அரிஹர முத்து ஐயர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், சனாதன தர்மத்தை தொடர்ந்து பின்பற்றி செயல்படுவோம். சனாதன தர்மத்திற்கு எந்தவித தடையும், இடையூறும் ஏற்படாத வகையில் மத்திய மாநில அரசுகளின் ஆதரவை கோருவோம்.

இடஒதுக்கீடு
மத்திய அரசின் உத்தரவின் படி சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து முற்பட்ட சமூகத்திற்கு கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் 10 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். திமுக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி மாதம் தோறும் மின் அளவீடு கணக்கிட்டு கட்டணத் தொகை வசூலிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

திமுக எம்பி-க்கு கண்டனம்
தொடர்ந்து பூமி பூஜை விழாவில் அநாகரிகமான முறையில் பேசி ஆன்மீகத்திற்கு எதிராக செயல்பட்ட தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாரை சங்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்ட அவர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Recommended Video

புதிய மாவட்டங்கள்
தமிழகத்தில் பெரிய மாவட்டங்களாக உள்ள ராமநாதபுரத்தில் இருந்து கமுதியையும், தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம், கடலூரில் இருந்து விருத்தாசலம், திருவண்ணாமலையில் இருந்து ஆரணி, தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி, திண்டுக்கல்லில் இருந்து பழனி ஆகியவற்றை பிரிக்க வேண்டும். இதன்மூலம் 6 புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும். மேலும் விலைவாசி உயர்வுக்கு காரணமான பெட்ரோல் டீசல் விலையை தமிழக அரசு ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications