நிலத்தை அளவீடு செய்ய தாலுகா ஆபீஸ் போகாதீங்க.. ஆன்லைனில் நில அளவை வசதி.. நிலங்களை இப்படி அளக்கலாம்
தர்மபுரி: நிலத்தை அளக்க இணையம் வழியாக விண்ணப்பம் செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நில உரிமைதாரர்கள் தங்களது நிலங்களை அளவை செய்ய பொது சேவை மையங்களை அணுகி, நில அளவை கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.
நிலம் வாங்கும்போது பல்வேறு விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது.. குறிப்பாக பட்டா வாங்கினாலும், அதில் நில அளவுகள் சரியாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். சிலசமயம் பட்டாவில் ஒன்று, நிலத்தை அளக்கும்போது வேறொன்றாகவும் அளவீடுகள் இருக்கும். இப்படியிருந்தால், நிலத்தை அவசரத்துக்கு விற்க முடியாத சூழல் எழும்.

கையூட்டு, கால தாமதம்
ஒருவேளை நில அளவை செய்ய வேண்டும் என்றாலும், தாசில்தார் ஆபீசுக்கு நடையாய் நடந்து உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டியிருந்தது..
பொதுமக்கள் தங்களது நிலத்தை அளவீடு செய்வதற்கு இதுவரை நேரில் சென்று அதிகாரிகளைக் கண்டு விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. இதனால் கால தாமதம், கையூட்டு போன்ற பிரச்சினைகள் எழுந்தபடியே இருந்தன.. இதற்கெல்லாம் ஒரு தீர்வை அரசு தந்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசு நிலம் தொடர்பான இணையவழிச் சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.
நில உரிமையாளர்கள்
நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பு ஒன்றை, தன்னுடைய மாவட்ட மக்களுக்கு விடுத்துள்ளார்.
அதில், நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்ப்பித்து வந்த நிலையில், வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 20.11.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
நில அளவை கட்டணம்
இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய 'எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்' நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், Citizen Portal மூலமாக இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தற்போது, இச்சேவையினை தமிழ்நாடு முழுவதும், அனைத்து பொது சேவை மையங்கள் (இ-சேவை) மூலமாகவும், விண்ணப்பிக்கும் வகையில் இவ்வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நில உரிமைதாரர்கள் தங்களது நிலங்களை அளவை செய்ய, பொது சேவை மையங்களை அணுகி, நில அளவைக்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க இயலும்.
மெசேஜ் - டவுன்லோடு
நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட 'அறிக்கை / வரைபடம்' நிலஅளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு, மனுதாரர் https://eservices.tn.gov.in/ என்ற இணைய வழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications