தர்மபுரியில் மண்ணுலகில் பிரிந்த காதல் கணவன்.. விண்ணுலகில் சந்திக்க சென்ற மனைவி.. இன்ஸடாவில் உருக்கம்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே தாளநத்தம் கிராமத்தை சேர்ந்த தீபமலை என்பவர் என்ஜினியர் ஆவார். இவரும் லேப் டெக்னீசியனாக இருந்த கீதா என்ற பெண்ணும் காதலித்துள்ளார்கள். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். இவர்கள் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் காதல் திருமணம் செய்த சில மாதங்களிலேயே தீபமலை உடல்நலக்குறைவால் மன்னைவிட்டு சென்றார். இந்நிலையில் நீங்கள் இல்லாத உலகில் வாழ விரும்பவில்லை என்று கீதாவும் தவறான முடிவெடுத்துள்ளார். இறுதியாக இன்ஸடாகிராமில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே தாளநத்தம் கிராமத்தை சேர்ந்த தீத்து மகன் தீபமலை என்பவருக்கு 26 வயது ஆகிறது. இவர் என்ஜினியர் ஆவார். பக்கத்து ஊரானா புட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்த கீதாவுக்கு 21வயது ஆகிறது.இவர் லேப் டெக்னீசியன் ஆவார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

பள்ளி பருவத்தில் இருந்து இருவரும் நட்போடு பழகி வந்துள்ளார்கள். கல்லூரி வயது நெருங்கியதும். இருவக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டு பெற்றோருக்கும் ஒரு கட்டத்தில் தெரியவந்தது. எதிர்ப்பு கிளம்பவே கடந்த ஓராண்டுக்கு முன்பு இவர்கள் இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் காதல் திருமணம் செய்த சில மாதங்களில் தீபமலைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகிளில் சிகிச்சை பெற்றும் தீபமலைக்கு உடல்நிலை சரியாகவில்லை. தான் இந்த பூமியை விட்டு போய்விடுவோம் என்றும் எண்ணிய தீபமலை, தனது காதல் மனைவி கீதாவிடம், தன்னை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டுக்கே சென்று நீ வாழ் என்று கூறியிருக்கிறார்.
முதலில் மறுத்த கீதா, ஒரு கட்டத்தில் வற்புறுத்தல் காரணமாக கடந்த 2 மாதத்திற்கு முன்பு கீதா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இந்தநிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட தீபமலை கடந்த 29-ந் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். காதல் கணவன் இறந்த துக்கம் தாங்காமல் கீதா மனவேதனையில் இருந்து வந்தாராம்.
இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி கீதா இன்ஸ்டாகிராமில் 'என்னால் உன்னை பிரிந்து இருக்க முடியாது. உன்னிடமே வருகிறேன்' என்று உருக்கமாக பதிவு செய்து விட்டு, வீட்டில் இருந்த சாப்பிடக்கூடாத மருந்து ஒன்றை தின்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீபமலையின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகே அவருடைய காதல் மனைவி கீதாவின் உடலையும் அடக்கம் செய்தனர்.இந்த சம்பவம் தர்மபுரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications