தர்மபுரி தனியார் மருத்துவமனையில் டாக்டர் மோனிகா இருந்த கோலம்.. ஆடிப்போன பெற்றோர்
தர்மபுரி: தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 27 வயதாகும் மோனிகா என்ற பெண் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பெற்றோர் திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். இதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். ஆனால் டாக்டர் மோனிகாவிற்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. எனினும் மாப்பிள்ளை பார்க்க பெற்றோர் முயற்சித்ததால், டாக்டர் மோனிகா திடீரென எடுத்த முடிவு பெற்றோரை ஆடிப்போக வைத்துள்ளது.
தர்மபுரி கடைவீதி அருகே ஹரிஹரநாத சாமி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவருடைய மகள் மோனிகாவுக்கு 27 வயது ஆகிறது. இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பை முடித்திருந்தார். தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மருத்துவமனையில் இரவு, பகல் என மாறி மாறி பணிகள் ஒதுக்கப்படுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு பணிக்கு டாக்டர் மோனிகா சென்றார்.

தனியார் மருத்துவமனையில் இரவில் பணியாற்றிய மோனிகா, தனது அறைக்குள் சென்றுள்ளார். ஆனால் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் டாக்டர் மோனிகாவின் அறை கதவு திறக்கப்படவில்லை. ஊழியர்கள் கதவை தட்டி பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவமனை நிர்வாகம், தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு டாக்டர் மோனிகா அசைவற்ற நிலையில் கிடந்தார். அவரை இன்னொரு டாக்டர் பரிசோதித்த போது மோனிகா பரிதாபமாக இறந்து இருப்பதை கண்டனர்.
தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த அவரது குடும்பத்தினர் டாக்டர் மோனிகாவின் உடலை கண்டு கதறி அழுதனர். மருத்துவனை பணியாளர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர். இதையடுத்து தர்மபுரி டவுன் போலீசார் பெண் டாக்டர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குடும்பத்தினர் மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
போலீசார் நடத்திய விசாரணையில், 27 வயதாகும் டாக்டர் மோனிகாவிற்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து வந்திருக்கிறார்கள். ஆனால் மோனிகாவிற்கு தற்போது திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
டாக்டர் மோனிகா எப்படி வாழ்க்கையை முடித்துக் கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவரது அறையில் மயக்க மருந்து பாட்டில்களும், ஊசிகளும் கைப்பற்றப்பட்டிருந்தன. இதையடுத்து பெண் டாக்டர், தனக்குத்தானே மயக்க மருந்தை உடலில் அதிக அளவில் செலுத்தி வாழ்க்கையை முடித்துக் கொண்டதும் விசாரணையில் தெரிய வந்தது. அவர், திருமண விவகாரத்தில் இந்த முடிவை எடுத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளதாம். பெண் டாக்டர் தர்மபுரி தனியார் மருத்துவமனையில் வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications