தர்மபுரி தொப்பூர் கணவாய்க்கு தீர்வு தான் என்ன? நேற்று நடந்த விபத்து கற்று தந்த பாடம் என்ன?
தர்மபுரி: தொப்பூர் கணவாய் பாலத்தில் சங்கிலி தொடர் போல 4 வாகனங்கள் மீது லாரி அடுத்தடுத்து மோதியது, இதில் தீப்பற்றி எரிந்த காரில் பெண் உள்பட ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலியாகினர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். அடிக்கடி நடக்கும் தர்மபுரி தொப்பூர் கனவாய் விபத்திற்கு தீர்வு தான் என்ன, நேற்றைய விபத்து கற்று தந்த பாடம் என்ன என்பதை பார்ப்போம்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் பெங்களூர்-சேலம் நெடுஞ்சாலையில் உள்ள முக்கியமான இடம் ஆகும். பெங்களூரில் இருந்து சேலம் செல்வோர் அதிவேகத்தில் செல்லும் போது, தொப்பூர் கணவாயில் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்குகின்றன. பெங்களூரில் இருந்து சேலம் செல்வோர் கண்டிப்பாக தொப்பூர் கணவாய் பகுதியில் செல்லும் போது இரண்டாவது கீரில் தான் செல்ல வேண்டியது கட்டாயம் ஆகும். இல்லாவிட்டால் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்குவது கண்டிப்பாக நிகழும். வளைவான அதேநேரம் மலைப்பகுதி சாலை என்பதால், தரையில் போவது போல் தொப்பூர் கணவாயில் சென்றால், விபத்தில் சிக்க அதிக வாய்ப்பு உள்ளது. தொப்பூர் கணவாயில் எத்தனை விபத்து நடந்தது என்பதை எண்ணவே முடியாது. அந்த அளவிற்கு விபத்து நடந்துள்ளது.

நேற்று நடந்த கோரவிபத்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திருப்பூர் மாவட்டம் காங்கயத்திற்கு நெல் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தத. இந்த லாரி, தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாயில் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மாலை 5.30 மணியளவில் வேகமாக சென்றது.
மலைப்பாங்கான இறக்கமான வளைவுடன் கூடிய தொப்பூர் கனவாய் சாலையில், வேகம் மற்றும் அதிக பாரம் காரணமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தாறுமாறாக ஓடியது. அந்த சாலையில் முன்னால் சென்ற 2 கார்கள், பெயிண்டு பவுடர் ஏற்றி வந்த ஒரு லாரி மற்றும் கன்டெய்னர் லாரி மீது என அடுத்தடுத்து 4 வாகனங்கள் மீது அந்த லாரி பயங்கரமாக மோதியது. அதே நேரத்தில் இந்த லாரி மோதியதில், பெயிண்டு பவுடர் ஏற்றிச்சென்ற லாரி தொப்பூர் கணவாய் இரட்டை பாலத்தை உடைத்துக்கொண்டு சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து நொறுங்கியது. இதில் அந்த லாரி டிரைவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
இதனிடையே விபத்தை ஏற்படுத்திய லாரி மோதிய முதல் காரும், கன்டெய்னரும் அந்த பெயிண்டு பவுடர் லாரிக்கு முன்பாக அந்த பாலத்தை கடந்து சென்று விட்டதால் அதில் இருந்த 5 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள். ஆனால் இந்த விபத்தில் நெல் பாரம் ஏற்றி வந்த லாரியின் அடியில் கார் சிக்கிக்கொண்டதில் திடீரென லாரி தீப்பற்றி எரிந்தது. இதில் அடியில் சிக்கிய காரிலும் தீ வேகமாக பரவியது. காரில் இருந்தவர்கள்அலறியடி தீயில் கருகி இறந்தனர். அந்த லாரி மற்றும் கார் முற்றிலும் எரிந்து தீக்கிரையானது.
லாரியின் அடியில் சிக்கி தீப்பற்றி எரிந்த காரில் கோவை மாவட்டத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 8 பேர் இருந்தனர். அவர்கள் பெங்களூருவில் இருந்து கோவைக்கு சென்றுள்ளார்கள். அவர்களில் 2 பேர் தீக்காயங்களுடன் காரில் இருந்து வெளியேறி உயிர் தப்பினர். காரில் மீதம் இருந்த 6 பேரில் 3 பேர் முற்றிலும் கருகினர். படுகாயம் அடைந்து மீட்கப்பட்ட 2 பேரில் ஜெனீபர் (வயது 28) என்ற பெண் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன்மூலம் தொப்பூர் கணவாய் கோர விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. இந்த கோர விபத்து காரணமாக தர்மபுரி-சேலம் சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனிடையே இரவு 9 மணியளவில் இரட்டை பாலத்தில் விபத்து நடக்காத மற்றொரு பாலம் ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை அபாயரகமான முறையில் அமைக்கப்பட்ட விதம் தான் தொப்பூர் கணவாயில் அடிக்கடி விபத்து ஏற்பட காரணம் என்று அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "தொப்பூர் பகுதியில் நேற்று நடந்ததை விபத்து என்று கூற முடியாது, மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் நடந்த கொலை என்று தான் கூற வேண்டும். தொப்பூர் பகுதி நெடுஞ்சாலை நாளுக்கு நாள் அதிக விபத்து நடக்கும் பகுதியாகவும், உயிர்ப்பலி வாங்கும் சாலையாகவும் மாறி வருகிறது என்பதையும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். சில ஆண்டுகளுக்கு முன் தொப்பூரில் ஒரே நேரத்தில் 15 ஊர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 400 மீட்டர் தொலைவு மட்டுமே கொண்ட தொப்பூர் கணவாய் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் 1000&க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் வேறு எந்த பகுதியிலும் இந்த அளவுக்கு அதிகமாக விபத்துகள் நடந்ததில்லை. தொப்பூர் கணவாய் பகுதியில் நடைபெறும் சாலை விபத்துகளுக்கு மனிதத் தவறுகளை விட, தேசிய நெடுஞ்சாலையின் அபத்தமான வடிவமைப்பு தான் காரணம் என்பதையும் பல்வேறு தருணங்களில் சுட்டிக் காட்டியுள்ளேன். தொப்பூர் பகுதியில் விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்ற அக்கறை மத்திய, மாநில அரசுகளுக்கு இருந்திருந்தால் சாலை வடிவமைப்பை மாற்ற எப்போதோ நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தொப்பூர் சாலையின் வடிவமைப்பை மாற்றுவது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் இதுவரை ஒரு கடிதம் கூட எழுதவில்லை. அந்த வகையில் பார்த்தால் தொப்பூரில் நடந்தது விபத்து அல்ல... மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் நடந்த கொடூர படுகொலை என்று தான் கூற வேண்டும். இந்த உயிரிழப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினராக நான் பணியாற்றிய போது, தொப்பூர் பகுதி நெடுஞ்சாலையை விபத்து இல்லாத பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினேன். அதனடிப்பபடையில் 2017&-18 ஆம் ஆண்டில் போக்குவரத்துக் காவல்துறை தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து எல் அண்டு ட்டி நிறுவனத்தின் பொறியாளர்கள் குழு தொப்பூர் சாலையை ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட சாலை சீரமைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததன் காரணமாக தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்துகள் நடக்காமல் தடுக்க ரூ.775 கோடியில் உயர்மட்டச் சாலை அமைக்க கடந்த மாதம் மத்திய அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், தொப்பூர் பகுதியில் விபத்து நடக்காது என்று நம்பிக் கொண்டிருந்த வேளையில் தான் இந்த விபத்து நடந்திருக்கிறது. தொப்பூர் கொலைகாரச் சாலையில் இனியும் விபத்து நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்.
மத்திய அரசால் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ள தொப்பூர் உயர்மட்டச் சாலை திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவது மட்டும் தான் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு ஒரே தீர்வு ஆகும். இதை உணர்ந்து தொப்பூர் உயர்மட்ட சாலை அமைக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகளை உடனடியாக இறுதி செய்து பணிகளைத் தொடங்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொப்பூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் நிதியுதவி வழங்கப்பட வேண்டும். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்." இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்..
-
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக?












Click it and Unblock the Notifications