தர்மபுரி மக்களின் 80 வருட கனவு.. தர்மபுரி -மொரப்பூர் இடையே இணைப்பு ரயில் பாதை.. எப்போது முடியும்?
தர்மபுரி: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தர்மபுரிமொரப்பூர் இடையே ரயில் பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வந்தது. கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பு 2வது உலக போரின் போது தர்மபுரி மொரப்பூர் இடையே ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் சென்னை பெங்களூர் ரயில் வழித்தடத்தில் அருகருகே இருந்தாலும், தர்மபுரி மக்களுக்கு பெரிய பலன் இல்லாமல் இருக்கிறது. எனவே தர்மபுரி-மொரப்பூர் இடையே இணைப்பு ரயில்பாதை அமைக்கும் பணி எப்போது தொடங்கி முடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தருமபுரியையும் மொரப்பூரையும் இணைக்கும் 36 கி.மீ நீளமுள்ள அகல ரயில் பாதை தான் தர்மபுரி பகுதி மக்களின் நீண்ட கால கனவு ஆகும். இது இரண்டாம் உலகப் போரின்போது கைவிடப்பட்ட ஒரு பழைய பாதையாகவும், அம்மக்களின் ஏக்கமாகவும் உள்ளது. தர்மபுரி மொரப்பூர் இடையே மீண்டும் ரயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தார்கள். இதையடுத்து தர்மபுரி- மொரப்பூர் இடையே ரயில் பாதை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

2016-17 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு சுமார் ₹358.95 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் மூக்கனூர், செட்டிக்கரை, அளே தருமபுரி, ரெட்டி அள்ளி உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் குடியிருப்புகள் பாதிக்கப்படுவதால், ரயில்வே துறை சில குறிப்பிட்ட பகுதிகளில் மாற்று வழித்தடத்தை அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
இந்தத் திட்டம் ஆரம்பத்தில் 2023 இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மூக்கனூர், செட்டிக்கரை, அளே தருமபுரி, ரெட்டி அள்ளி உள்ளிட்ட இடங்களில் நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக பணிகள் தள்ளிப்போய்கொண்டே இருக்கிறது. இதனால் தான் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த திட்டப்பணிகள் நிலம் கையகப்படுத்தும் நிலையிலேயே இன்னும் உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் இருந்து சென்னை, வேலூர் உள்பட பல்வேறு நகரங்களுக்கு போக்குவரத்து தேவை அதிகரித்து வரும் சூழலில் இந்த ரயில் பாதை இணைப்பு திட்டத்தை விரைவாக தொடங்கி செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருக்கிறது.
இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் உள்ள நடைமுறை பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும். இந்த ரயில் பாதை இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்போது தர்மபுரி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். விவசாய விளை பொருட்களை சரக்கு ரயில்கள் மூலமாக பெருநகரங்களுக்கு எளிதாக எடுத்து செல்வதற்கான போக்குவரத்து வசதி உருவாகும். இதன் மூலம் விவசாயிகள் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவார்கள். பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வாழ்வாதாரம் மேம்படும் என்று மக்கள் கூறுகிறார்கள்.
இந்த திட்டத்தை பொறுத்தவரை எதார்த்தம் என்னவென்றால், மொத்த நிலத்தில் 134 ஏக்கர் நிலம் தனியாருக்குச் சொந்தமானது என்பதால் அதனை கையகப்படுத்த வேண்டியுள்ளது. பழைய மீட்டர்கேஜ் பாதை பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்படாததால், அதன் நிலங்கள் விவசாய நிலங்களாகவும், குடியிருப்புப் பகுதிகளாகவும் மாறிவிட்டன. இதனால், அதே பாதையில் மீண்டும் அகலப் பாதையை அமைக்கும்போது, குடியிருப்புகளும், விவசாய நிலங்களும் பாதிக்கப்படும் நிலை இருக்கிறது. தர்மபுரி- மொரப்பூர் இடையே ரயில் பாதை 2028ம் ஆண்டுக்கு பின்னரே பணிகள் நிறைவு பெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications