தாலி கட்ட போறியா இல்லையா.. வாட்ஸ்அப்பில் மிரட்டல் வீடியோ விடுத்த காதலியை மணந்த இளைஞர்!
வங்கி பெண் அதிகாரிக்கு இளைஞருடன் திருமணம் நடந்தது
தர்மபுரி: திருமணம் செய்ய மறுத்தால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்த பெண்ணையே.. காதலித்த இளைஞர் திருமணம் செய்து கொண்டார். போலீசாரின் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி.. 25 வயதாகிறது... அரூர் பகுதியில் ஒரு பிரைவேட் வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜராக வேலை பார்த்து வந்தார்.

அப்போது அதே பேங்கில் உயர் அதிகாரியாக வேலை பார்க்கும் அருண்குமார் என்பவருடன் காதல் ஏற்பட்டது.. இருவரும் ஒரு வருடமாக காதலித்து வந்தனர். நாள் ஆக ஆக.. அருண்குமார் ராஜேஸ்வரியுடன் பழகுவதை குறைக்க ஆரம்பித்தார்... கல்யாண பேச்சை ராஜேஸ்வரி எடுத்தாலே அதற்கு அவர் மறுப்பு சொன்னார்.
இந்நிலையில், அருண்குமாருக்கு அவர் வீட்டில் பெற்றோர்கள் கல்யாணத்துக்கு பெண் பார்க்க ஆரம்பித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி சில தினங்களுக்கு முன்பு அரூர் மகளிர் ஸ்டேஷனிலும், தர்மபுரி எஸ்பி., ஆபீசிலும் புகார் மனு தந்தார்.. இதையடுத்து எஸ்பியின் உத்தரவின்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே, தனக்கு உரிய நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ள போவதாக வீடியோ ஒன்றினை ராஜேஸ்வரி வெளியிட்டார். இந்த வீடியோ விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால் தர்மபுரி மகளிர் போலீசார் ராஜேஸ்வரி, அருண்குமாரை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியில் ராஜேஸ்வரியை கல்யாணம் செய்ய அருண்குமார் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து தர்மபுரி மகளிர் ஸ்டேஷன் எதிரே உள்ள விநாயகர் கோயிலில் இவர்களின் திருமணம் நடந்தது.. உறவினர்கள், நண்பர்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.. அத்துடன் போலீசாரும் தங்கள் வாழ்த்துக்களை அவர்களுக்கு தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications