அங்கே ஏன் நின்றார்? அந்த ஒரு போட்டோவை பார்த்தீங்களா.. விதியை மீறிய ஆளுநர் ரவி? நடந்தது என்ன?
சிதம்பரம்: சிதம்பரம் சென்று இருக்கும் ஆளுநர் ஆர். என் ரவி அங்கு கோவில் விதிகளை மீறி செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு இன்று ஆளுநர் ரவி சென்றுள்ளார். தெலங்கானாவில் நடைபெற உள்ள புஷ்கர விழாவுக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து விழா எடுக்கப்படும்.
மயிலாடுதுறையில் இருந்து ஞானரதம் இன்று தெலுங்கானாவிற்கு செல்ல உள்ளது. இந்த பயணத்தை ஆளுநர் ரவி தொடங்கி வைத்தார்.

ஆளுநர் ரவி மயிலாடுதுறை
இதற்காக ஆளுநர் ரவி மயிலாடுதுறை சென்றார். இந்த நிலையில் இந்த விழாவிற்கு ஆளுநர் ரவியை அழைக்க கூடாது என்று திக, திவிக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். அதோடு மயிலாடுதுறையில் ஆளுநருக்கு எதிராக கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர் . ஆளுநர் ரவி வருகையை எதிர்த்து திக, திவிக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். நேற்றே ஆளுநர் இந்த விழாவிற்காக சிதம்பரம் வந்துவிட்டார்.

சிதம்பரம்
சிதம்பரம் சென்ற அவர் நேற்று காலை சிதம்பரம் நடராஜர் கோவிலில் தனது மனைவியோடு சேர்ந்து வழிபாடு நடத்தினார். இந்த நிலையில் ஆளுநருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு அங்கு வழிபாடு நடத்தப்பட்டது. அவருக்கு கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோவிலில் சில நிமிடங்கள் வழிபாடு செய்தவர் அங்கு இருந்த சாமி சிலைகளை பார்த்தார். கோவிலின் வரலாறு பற்றி ஆளுநர் ரவியிடம் விளக்கப்பட்டது.

என்ன நடந்தது
இந்த நிலையில் கோவில் வளாகத்திற்குள் ஒரு இடத்தில் ஆளுநர் ரவி தனது மனைவியுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதில் கோவில் பூசாரிகள், ஊழியர்கள் இடம்பெற்று இருந்தனர். இந்த புகைப்படம்தான் சர்ச்சையாகி உள்ளது. அதில் புகைப்படத்திற்கு பின்னே இருக்கும் போர்ட் ஒன்றில் இங்கே புகைப்படம் எடுக்க கூடாது என்று போட்டுள்ளது. சரியாக அதற்கு முன் நின்று ஆளுநர் புகைப்படம் எடுத்ததுதான் சர்ச்சையாகி உள்ளது.

கோவில்
பொதுவாக கோவில்களில் சில இடங்களில் போட்டோ எடுக்க தடை விதிக்கப்படும். இதை மீறி போட்டோ எடுத்தால் அபராதம் விதிக்கப்படும். அதேபோல் நடவடிக்கையும் எடுக்கப்படும். ஆனால் ஆளுநர் சரியாக போட்டோ எடுக்க கூடாது என்று சொல்லப்பட்ட இடத்தில் இருந்து புகைப்படம் எடுத்ததுதான் சர்ச்சையாகி உள்ளது. சரியாக அங்கே நின்று ஏன் போட்டோ எடுத்தார் என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

விளக்கம் என்ன?
அதேபோல் ஆளுநர் உள்ளே வரும் போதும் அவரை கேமரா மேன்கள் சூழ்ந்து பல இடங்களில் புகைப்படங்கள் எடுத்தனர். இதுவும் இணையத்தில் வைரலாகி உள்ளது. பொதுவாக இது போன்று பெரிய தலைவர்கள் கோவிலுக்கு வரும் போது அவர்கள் கோவிலுக்குள் புகைப்படம் எடுப்பது வழக்கம்தான். இதில் விதி மீறல் இல்லை என்று அதிகாரிகள் வட்டாரத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications