ஷாக்.. கத்திரிக்கோலால் குத்தி கிழித்து 14 வயது மாணவன் கொலை.. சக மாணவன் வெறிச்செயல்
கொடைக்கானலில் பள்ளி மாணவனை சக மாணவன் கொலை செய்துள்ளான்
Recommended Video
திண்டுக்கல்: 14 வயது சிறுவனை கத்திரிக்கோலால் கிழித்தும், கிரிக்கெட் மட்டையால் தாக்கியும் கொன்றுள்ளார் இன்னொரு 14 வயது சிறுவனே! 10-ம் வகுப்பு படிக்கும் இந்த மாணவன் உயிரிழந்த சம்பவத்தினால் கொடைக்கானலே பதறி கிடக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கால்ப் மைதானம் அருகே ஒரு பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்தான் ஸ்ரீ ஹரி, மற்றும் கபில் ராகவேந்திரா ஆகியோர். இருவருமே ஒரே கிளாஸ்தான்..

ராஜபாளையத்தை சேர்ந்தவன் ஸ்ரீ ஹரி! ஓசூரை சேர்ந்தவன் கபில் ராகவேந்திரா! இந்த பள்ளிக்கென்று தனியாக ஒரு ஹாஸ்டலும் உண்டு. இவர்களுக்குள் என்ன தகராறு என்ற முழு விவரம் தெரியவில்லை. ஆனால் நேற்றிரவு கூட இருவருக்கும் சண்டை வந்திருக்கிறது.
இன்று காலையும் சண்டை தொடர்ந்துள்ளது... ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஸ்ரீஹரி, கபில் ராகவேந்திராவை கத்திரிகோலால் குத்தி கிழித்து தாக்கி உள்ளான். மேலும் கிரிக்கெட் ஸ்டெம்பாலும் அவன் மண்டையிலேயே மிக மோசமாக தாக்கியும் உள்ளான்.

இதில் கபில் ராகவேந்திரா ரத்த வெள்ளத்திலேயே உயிரிழந்து விட்டான். இச்சம்பவம் இன்று காலை நடந்துள்ளது. இதுகுறித்து ஸ்ரீ ஹரியை கொடைக்கானல் போலீசார் கைது செய்துள்ளனர். கபில் ராகவேந்திராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் சம்பந்தப்பட்ட ஸ்கூலுக்கு நேரில் சென்று, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு மாணவனை இன்னொரு மாணவனே இவ்வளவு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தினால் கொடைக்கானலில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications