புல்வாமாவில் தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல்.. 12 பொதுமக்கள் படுகாயம்.. ராணுவம் பதிலடி

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 12 பொதுமக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவமும், பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் சில தீவிரவாத அமைப்புகளும் தொடர்ந்து தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.

12 people injured in the Grenade attack by terrorists in Pulwama

கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள், 3 பொது மக்கள் பலியானார்கள். இதில் 8 பாகிஸ்தான் வீரர்கள் பலியானார்கள். இந்த நிலையில் தற்போது புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

புல்வாமாவில் இருக்கும் காகபோரா பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து சிஆர்பிஎப் படை வீரர்களை நோக்கி இவர்கள் கையெறி குண்டுகளை வீசி உள்ளனர்.

ஆனால் இந்த குண்டுகள் குறி தவறி, மக்கள் செல்லும் சாலையில் விழுந்துள்ளது. அந்த பகுதியில் இருந்த 12 பொது மக்கள் இதனால் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் படைவீரர்கள் யாரும் பலியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிஆர்பிஎப் படை வீரர்கள் அங்கு பதிலடி தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+