அடுத்தடுத்து சோகம்.. திண்டுக்கல் ரயில்வே பணி குழியில் விழுந்த 2 சிறுவர்கள்.. நீரில் மூழ்கி பலி
திண்டுக்கல்: தேனியில் சமீபத்தில் சிறுமி ஒருவர் பூங்காவுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த நிலையில், தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் ரயில்வே பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனியில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க வந்தபோது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சிறுமி பலி
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் பூங்கா அமைப்பதற்காக சில நாட்களுக்கு முன்னர் குழி தோண்டப்பட்டிருந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக இந்த பள்ளத்தில் மழை நீர் தேங்கி இருந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் இருந்த சிறுமி ஒருவர் இயற்கை உபாதைகளை கழிக்க வந்தபோது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஓபிஎஸ், அன்புமணி உள்ளிட்டோர் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மற்றொரு அதிர்ச்சி சம்பவம்
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த விவாதங்கள் குறையும் முன்னரே தற்போது மேலும் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடி அருகே உள்ள கம்மாளப்பட்டி பகுதியில் ரயில்வே பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து இந்த சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். தேனியில் சிறுமி உயிரிழந்த சம்பவத்தின் வடு மறையாத நிலையில் மற்றொரு சம்பவத்தில் இரு சிறுவர்கள் உயிரிழந்திருப்பது மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயில் குடமுழுக்கு
திண்டுக்கல்லின் கம்மாளப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் திருக்கோயில் இன்று குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. எனவே மாநிலம் முழுவதும் இந்த கோயிலை குலதெய்வமாக கொண்டவர்கள் வழிபாட்டிற்கு இந்த கிராமத்திற்கு வந்திருந்தனர். இந்த கோயிலுக்கு அருகே ரயில்வே இருப்புப்பாதை ஒன்று செல்கிறது. இந்த பாதையையொட்டிய இடங்களில் ரயில்வே நிர்வாகம் சீரமைப்பு பணிகளுக்காகவும், தடுப்புசுவர் எழுப்புவதற்காகவும் பள்ளம் தோண்டி வைத்திருந்தது.

உயிரிழப்பு
இந்நிலையில் இந்த பள்ளம் தோண்டப்பட்ட பகுதியில் சிறுவர்கள் இருவர் விளையாட சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளனர். இதனை கண்ட சிறுமி ஒருவர் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்திருந்தார். உடனே சிறுவர்களை மீட்ட அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அழைத்து வரும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் ஒட்டுமொத்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. மேலும் சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் தோண்டப்பட்ட பள்ளத்தை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். ரயில்வே நிர்வாகம் தோண்டிய பள்ளம் 10-15 அடி வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications