இன்ஜினில் எட்டி பார்த்த எமன்! திண்டுக்கல் மேம்பாலத்தில் பைக்கை போட்டுவிட்டு பதறி ஓடிய இளைஞர்!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இருசக்கர வாகனத்திற்குள் இருந்த கருநாகம், நீண்ட நேரம் வெளியே வராமல், தீயணைப்பு துறையினருக்கே போக்கு காட்டியது... ஒரு வழியாக அவர்கள் பாம்பை பிடித்து கொண்டு சென்றனர்.. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது..
இருசக்கர வாகனத்தில் செல்வோர் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டியது அவசியம் ஆகும்.. ஏனெனில் மோட்டார் சைக்கிளின் என்ஜின் அல்லது சீட் பகுதியில் சிறிய ரக நாகபாம்புகள் ஏறி படுத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. தினமும் வண்டியை இரண்டு தட்டு தட்டிவிட்டு, முடிந்தால் வாகனத்தை துடைத்துவிட்டு எச்சரிக்கையுடன் வாகனத்தை இயக்குங்கள்.

குறிப்பாக ஸ்கூட்டி போன்ற வாகனத்தை இயக்குவோர், வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் முன்பு நிச்சயம் ஏதேனும் சத்தம் வருகிறதா, ஏதாவது வாகனத்தில் இருக்கிறதா என்பதை தினமும் உறுதி செய்துவிட்டு எடுங்கள்.. ஏனெனில் திண்டுக்கல்லில் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர வைத்துதள்ளது.
நேற்று முன்தினம் திண்டுக்கல் பெண்கள் அரசு கல்லூரி அருகே உள்ள மேம்பாலத்தில் இருசக்கர வாகனம் ஒன்ற சென்று கொண்டிருந்தது.. அதில் இரண்டு இளைஞர்கள் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு அடி நீளமுள்ளள கருநாக பாம்பு ஸ்டேரிங் மீது ஏறி சீரியது.. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டியும் , பின்னால் அமர்ந்தவரும், வாகனத்தை அந்த இடத்திலேயே போட்டுவிட்டு ஓடினார்கள்.. பாம்பு பாம்பு என அலறியபடி வாகனத்தை கீழே போட்டவர்கள், அடுத்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அந்த தகவலின் பேரில் வந்த தீயணைப்புத் துறையினர் திண்டுக்கல் பெண்கள் அரசு கல்லூரி மேம்பாலத்திற்கு வந்தனர்.. அவர்கள் இருசக்கர வாகனத்தில் பாம்பை தேடிய போது தெரியவில்லை. எனினும் பாம்பை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார்கள். அப்போது, ஒரு அடி நீளம் கொண்ட கருநாகப் பாம்பு நீண்ட நேரம் விளையாட்டு காட்டியபடி இருந்தது. வாகனத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து பார்த்தனர்.. அப்போதும் பாம்பு வரவில்லை. ஒரு வழியாக நீண்ட நேரம் போராடி இருசக்கர வாகனத்தில் இருந்து பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக பிடித்தனர்..
இதனிடையே திண்டுக்கல் - கரூர் இணைப்பு மேம்பால சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், வாகனத்தை ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி தீயணைப்புத் துறையினர் பாம்பை மீட்பதை வேடிக்கை பார்த்தனர். இதனால் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.. ஒரு அடி நீள கருநாக பாம்பு குட்டி திண்டுக்கல் நகரையே ஒரு மணிநேரத்திற்கு மேல் பரபரப்பாக்கியது.












Click it and Unblock the Notifications