எங்ககிட்டயேவா? போலீஸ் மீது சீறிய மாஜி பெண் எம்.எல்.ஏ.- டக்கென போன் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!
திண்டுக்கல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் வருகையின் போது தம்மை சந்திக்கவிடாமல் போலீசார் தடுப்பதாக ஃபேஸ்புக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி பதிவிட்டிருந்தார். இந்த பதிவு சர்ச்சையான நிலையில் பாலபாரதியை தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி நடந்தது என்ன என்பதை விசாரித்திருக்கிறார். இதையடுத்து இச்சர்ச்சை முடிவுக்கு வந்தது.
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தேனி பயணத்தை முடித்துக் கொண்டு திண்டுக்கல் வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் பெருந்திரளான திமுகவினர் உற்சாக வரவேற்பு தந்தனர். பல கிலோ மீட்டர் தொலைவுக்கு கொளுத்தும் வெயிலில் நின்ற்படி முதல்வர் ஸ்டாலினுக்கு திமுகவினர் வரவேற்பு கொடுத்தனர்.

திண்டுக்கல் கூட்டம்
பின்னர் அங்குவிலாஸ் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலத் திட்டங்கள் குறித்து அமைச்சர்களிடம் விசாரித்து வருகிறேன். மக்களுக்கான நலத் திட்டங்களை யாராலும் முடக்கி விட முடியாது. சமூக நீதியை உருவாக்குவதிலும், பொருளாதாரத்தில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க செய்வதிலும், உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், பெண்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதிலும் உழைத்து வருகிறோம் என்றார்.

திரண்ட திமுகவினர்
திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை இரு அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, அர.சக்கரபாணி உள்ளனர். அதேபோல் வேடசந்தூர் எம்.எல்.ஏ காந்திராஜன், பழனி எம்.எல்.ஏ. ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் எம்.பி.வேலுச்சாமி என உள்ளனர். அனைவரும் தங்களது ஆதரவாளர்களை பெருந்திரளாக முதல்வர் ஸ்டாலின் கூட்டத்துக்கு அழைத்து வந்தனர். அதே நேரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையிலான வரவேற்பு பதாகைகளை வழியெங்கும் வைக்காமல் இருந்தனர். மேலும் முதல்வருடன் வந்த விஐபிக்களுக்கு நகரின் மையத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் சில அறைகள் ஒதுக்கப்பட்டு போலீசாரும் பாதுகாப்புப் பணியில் இருந்தனர்.

மாஜி எம்.எல்.ஏ பாலபாரதி பதிவு
திமுகவினர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியிக் படுபிஸியாக இருந்த போதுதான் திண்டுக்கல் சிபிஎம் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தமது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், திண்டுக்கல் வருகை புரிந்த தமிழக முதலமைச்சர் அவர்களை சந்திப்பதற்கு எத்தனை முயற்சி செய்தும் முடியவில்லை. டாணாக்காரர்கள் நடத்திய நாடகம், சுவாரசியமானது. ஏப்பா எங்ககிட்டேயாவா? என சீறியிருந்தார். பாலபாரதியின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு சர்ச்சையானது.

போனில் விசாரித்த முதல்வர்
இந்த நிலையில் தமது சமூக வலைதளப் பக்கத்தில் பாலபாரதி வெளியிட்ட மற்றொரு பதிவில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் போனில் தொடர்பு கொண்டு பேசியது மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வழங்கியது.நன்றியும்வாழ்த்துகளும்.. என கூறியுள்ளார். ஒரு சிலர் வழக்கம் சில விமர்சனங்களையும் வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சீற்றத்துடன் எழுதிய பதிவை மட்டும் பாலபாரதி நீக்கிவிட்டார்.
Recommended Video

ஸ்டாலின் சொன்னது என்ன?
அதாவது பாலபாரதியின் இந்த பதிவு முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து பாலபாரதியை போனில் தொடர்பு கொண்டார் முதல்வர் ஸ்டாலின். ஏன் என்னாச்சு? யார் சந்திக்க விடாமல் தடுத்தாங்க? என முதல்வர் கேட்டிருக்கிறார். அப்போது சில அதிகாரிகள் நடத்திய நாடகத்தை விலாவாரியாக பாலபாரதி விவரித்திருக்கிறார். அப்போது, நீங்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்.. யாரும் தடையாக இருக்க மாட்டார்கள் என உறுதி அளித்தாராம் முதல்வர் ஸ்டாலின். திண்டுக்கல் அரசியலில் இப்போது இதுதான் ஹாட் டாபிக்.
-
200+ உறுதி.. சிதறிய எதிர்க்கட்சிகள்... ஜாலியாக 'ஸ்வீப்' செய்யும் திமுக? பாலி மார்க்கெட் பரபர கணிப்பு -
உதயநிதி ஸ்டாலினை மதிக்காத கேஎன் நேரு? எழுந்து நின்றும் கண்டுகொள்ளவில்லையே.. இருவருக்கும் சண்டையா? -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
Kanimozhi: சட்டசபைத் தேர்தலில் களமிறங்கும் கனிமொழி? எந்த தொகுதியில் களமிறங்க வாய்ப்பு? -
சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு! திமுக சரமாரி குற்றச்சாட்டு -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
“பைத்தியக்காரத்தனம்”.. திமுக சட்ட எரிப்பைக் கிண்டல் செய்த பெரியார்? கெடு விதித்த அண்ணா! -
கள்ள நோட்டு கும்பல் கைது.. களத்தூரில் குடிசைகள் தீ வைப்பு.. காமராஜரின் 10 ஆண்டுகால ஆட்சி! -
திமுக ஆட்சியில் 6 மாதம் மும்மொழிக் கொள்கை! அமெரிக்காவில் அண்ணா சொன்ன விளக்கம்! -
மகளிர் உரிமைத் தொகை.. திட்டத்தை அறிவித்த திருச்சியில் நின்று மு.க.ஸ்டாலின் சொன்ன வார்த்தை! -
புதுசு புதுசா யாரை கூட்டிட்டு வந்தாலும் தமிழ்நாடு பாஜகவுக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.. ஸ்டாலின்












Click it and Unblock the Notifications