ரஞ்சிதாவை காட்டுக்குள் கூட்டிச் சென்ற ராஜ்குமார்.. மிரண்டுபோன திண்டுக்கல்.. டிரைவர் பரபர வாக்குமூலம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கள்ளக்காதலியை உயிருடன் எரித்துக் கொலை செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
Recommended Video

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கஸ்பா அய்யலூரை சேர்ந்த செந்தில்மணி, டிரைவர். அவருடைய மனைவி ரஞ்சிதா (வயது 26). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த29ம் தேதி அன்று மருத்துவமனைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு ரஞ்சிதா வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

விசாரணை
இதுகுறித்து பூசாரிப்பட்டியை சேர்ந்த ரஞ்சிதாவின் தந்தை முருகேசன் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சிதாவை தேடி வந்தனர். ரஞ்சிதாவின் செல்போன் எண்ணை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி விசாரணை முடக்கிவிடப்பட்டது.

கள்ளக்காதல்
போலீசார் நடத்திய விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள ஆர்.புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜ்குமார்(30) என்பவருடன் ரஞ்சிதா அடிக்கடி செல்போனில் பேசியது தெரியவந்தது. டிரைவரான ராஜ்குமாருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

ராஜ்குமார் கைது
இந்நிலையில் ராஜ்குமாரை பிடித்து போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ராஜ்குமாருக்கும், ரஞ்சிதாவிற்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ரஞ்சிதாவை எரித்துக் கொன்றுவிட்டதாக ராஜ்குமாரை கூறினார். இதையடுத்து ராஜ்குமாரை கைது செய்தோம் என்றார்கள்.

கொலை ஏன்?
ராஜ்குமார் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், எனக்கும், ரஞ்சிதாவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. நாங்கள் அடிக்கடி செல்போனில் பேசி வந்தோம். கடந்த 29ம் தேதி ரஞ்சிதா உடன் வேடசந்தூர் அருகே காட்டுப்பகுதிக்கு சென்றேன். அங்கு வைத்து எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.அப்போது நான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ரஞ்சிதா மீது ஊற்றி, உடலில் தீ வைத்து எரித்து கொன்றுவிட்டேன்" என்றார். ராஜ்குமாரின் வாக்குமூலத்தை அடுத்து குறிப்பிட்ட காட்டுப்பகுதிக்கு சென்று தடயங்களை சேகரித்தேன். இந்த கொலையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது,
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications