கேரள மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை..நடுரோட்டில் இறக்கி விட்டு சென்ற கொடூரம்! திகுதிகு திண்டுக்கல்
திண்டுக்கல் : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கும் சம்பவங்கள் அதிகரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவியை அடையாளம் தெரியாத மர்ம நம்பர்கள் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டுச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பள்ளியில் என்சிசி முகாம் நடத்துகிறேன் என்ற பெயரில் 17 மாணவிகளை நான்கு நாட்கள் பள்ளியில் தங்க வைத்திருக்கிறார்கள். இதற்கான உரிய அனுமதியை பள்ளிக்கல்வித்துறை மட்டும் மாவட்ட என்சிசி தலைமையகத்தில் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

இதேபோல், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (NIT- Trichy) பெண்கள் விடுதி அறையில், அங்கிருந்த மாணவி முன்பே இணையதள பழுது பார்க்க வந்த நபர் பாலியல் ரீதியாக அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டதாக செய்தி வெளியானது.
வால்பாறை அரசு கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு எதிரான குற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய மாணவிகள் தங்கள் கல்லூரியில் கற்பித்து வரும் இரண்டு தற்காலிக பேராசிரியர்கள், ஆய்வுக்கூட உதவியாளர், என்சிசி பயிற்சியாளர் தங்களிடம் ஆபாசமாக தொட்டு பேசுவதாகவும், ஆபாச மெசேஜ் அனுப்புவதாக புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

அந்த வகையில் பெரும் அதிர்ச்சி தரும் விதமாக தேனி மாவட்டத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவியை அடையாளம் தெரியாத மர்ம நம்பர்கள் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டுச் சென்றுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டதை சேர்ந்த மாணவி ஒருவர் தேனியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று 23.09.24 காலை தனது சொந்த ஊரில் இருந்து தேனிக்கு பேருந்தில் வந்துள்ளார். பழைய பேருந்து நிலையம் அருகே வந்த போது அப்பொழுது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மாணவியை காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் மாணவியை அதே காரில் திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே இறக்கி விட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தார். போலீசார் மாணவியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தற்பொழுது திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கேரளாவை சேர்ந்த மர்ம நம்பர்கள் காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார் இதனை அடுத்து காவல்துறையினர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மாணவியிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ஊரே ஒன்னு சேர்ந்து..செருப்பால் அடிச்சு! என்னங்க நடக்குது இங்க.. திருவிழானாலும் ஒரு நியாயம் வேண்டாமா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications