Oneindia special: அப்பளத்தை பார்த்தால் நொறுக்க தோணும்..இவருக்கு என்ன தோணியிருக்கு பாருங்களேன்! சிறப்பு
திண்டுக்கல்: தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில் மறைந்து வரும் பண்டைய கால தமிழர்கள் வாழ்வியல் முறைகளை தற்போதைய சந்ததியினர் அறியும் வகையில் அப்பளத்தில் ஓவியங்களை வரைந்து வருகிறார் திண்டுக்கலைச் சேர்ந்த ஓவியர் சபரிநாதன்.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சபரிநாதன். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது இரண்டாம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்து ஓவியத்தில் அதிக ஆர்வம் கொண்ட சபரிநாதன் தொடர்ந்து பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்து வந்தார்.

இதற்கிடையே தமிழர்கள் பண்டைய கால வாழ்வியல் முறைகள் தற்பொழுது அழிந்து வரும் நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தமிழர்களின் பண்டைய கால வாழ்வியல் முறைகள் தற்போதைய சந்ததியினருக்கு அறிவது என்பது அரிதான ஒன்றாக இருக்கிறது.
இதனை அவர்கள் எளிதில் அறிந்து கொள்வதோடு எப்பொழுதும் மனதில் ஞாபகம் வைத்துக் கொள்ளும் வகையில் தமிழர் வாழ்வியல் என்ற தலைப்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அப்பளத்தில் ஓவியங்களை வரையத் துவங்கினார் சபரிநாதன்.

இதில் இளந்தாரி கல் தூக்குவது, தேர் இழுத்தல், பூ புனித நீராட்டு விழா, காதணி விழா, சிற்பக் கலைக்கூடம், வானியல் சாஸ்திரம், அழகு குத்துதல், பறவை காவடி எடுத்தல்,ஏறு தழுவுதல், சிலம்பாட்டம், கிடா வெட்டுதல், தீச்சட்டி எடுத்தல், பாட்டி வெத்தலை இடித்தல், சிலம்பாட்டம், கும்மியாட்டம், கல் சிற்பம் உறியடித்தல் மற்றும் இறுதிச் சடங்கு ஆகிய 18 வகையான நிகழ்வுகளை அப்பளத்தில் ஓவியமாக தீட்டி அசத்தியுள்ளார் சபரிநாதன்.

மேலும் இதுகுறித்து ஓவிய ஆசிரியர் சபரிநாதன் ஒன் இந்தியா தமிழிடம் பேசுகையில்," தற்பொழுது வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காலத்தில் அனைவரும் செல்போன் உள்ளிட்ட தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அழிந்து வரும் பண்டைய கால தமிழர்களின் வாழ்வு ஏழு முறைகளை தற்போதைய சந்தேகத்தினர் அறிவது என்பது அரிதான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் அவர்கள் இதுபோன்ற அப்பளத்தில் வரையப்பட்டுள்ள ஓவியத்தின் மூலம் அதனை அறிந்து கொள்வதோடு எளிதில் எப்பொழுதும் மனதில் வைத்துக் கொள்ள முடியும்..

காரணம் பேப்பர் ஓவியம், சுவர் சுவர் ஓவியம் ஆகியவற்றில் வரையப்படும் ஓவியங்கள் அப்போது மட்டுமே மனதில் இருப்பதாகவும் எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் உணவு பரிமாறும் போது அப்பளம் என்பது அனைவருக்கும் வைக்கப்படுகிறது. அப்படி அந்த அப்பளத்தை பார்க்கும் போதெல்லாம் இந்த ஓவியங்கள் அவர்களின் மனதில் முன்வந்து நிற்கும் என்று கூறும் சபரிநாதன் இந்த அப்பளம் ஓவியத்தின் மீது தன்னிடம் பயிலும் மாணவர்களும் ஆர்வம் காட்டி தற்பொழுது அவர்களும் இதனை வரைய துவங்கியுள்ளதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications