திண்டுக்கல்லில் கொரோனாவால் ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: கொரோனா பரவலால் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஜல்லிபட்டி என்ற கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திண்டுக்கல் நகரிலும் இரண்டு பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரம் பேரை நெருங்கியது. 3986 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் 1824 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1459 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கோவையில் 332 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 390 பேருக்கு தொற்று உறுதியானது. திருவள்ளூரில் 208 பேருக்கும், திருப்பூரில் 141 பேருக்கும் தஞ்சாவூரில் 108 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா பரவல்

கொரோனா பரவல்

கொரோனா பரவல் பல மாவட்டங்களில் அதிகரித்துள்ளதால் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. .திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மொத்தமாக 338 பேர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இரண்டு பகுதிகள்

இரண்டு பகுதிகள்

இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட அசோக்நகர், நாராயணன் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தெருக்களை தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அதிரடி அறிவிப்பு

அதிரடி அறிவிப்பு

இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஜல்லிப்பட்டி என்ற கிராமத்தில் கொரோனா பரவல் அதிகரித்தன் காரணமாக அந்த கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது.

கூட்டங்கள் நடத்த தடை

கூட்டங்கள் நடத்த தடை

இன்று மட்டும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் கோயில் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 50 % இருக்கைகளுடன் திரையரங்கம் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+