திண்டுக்கல்லில் மர்ம நபர்கள் திடீர் சரமாரி துப்பாக்கிச் சூடு-26 வயது இளைஞர் பலி- முன்விரோதம் காரணமா?
திண்டுக்கல்: திண்டுக்கல் செட்டிகுளம் பகுதியில் மர்ம நபர்கள் நேற்று இரவு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 வயது இளைஞர் ராகேஷ் என்பவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்கின்றனர் போலீசார்.
Recommended Video
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் ராகேஷ். அவர் தமது நண்பர்களுடன் செட்டிகுளம் அருகே குளத்தின் கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

சரமாரி துப்பாக்கி சூடு
அப்போது அங்கு திடீரென வந்த மர்ம நபர்களில் ஒருவர் அந்த இளைஞர்கள் மீது சரமரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் ராகேஷ் நெஞ்சில் ஒரு துப்பாக்கி குண்டு பாய்ந்தது. ராகேஷ் உடலில் மொத்தம் 6 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தன. இதையடுத்து உடனடியாக ராகேஷை அரசு மருத்துவமனைக்கு அவரது நண்பர்கள் அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

முன்விரோதம் காரணமா?
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் துறை வல்லுநர்களும் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இது தொடர்பாக போலீஸ் வட்டாரங்களில் நாம் விசாரித்த போது செட்டிகுளம் குளத்தில் மீன்பிடிக்க ராகேஷ் குத்தகைக்கு எடுத்திருந்தார். இந்த குத்தகை தொடர்பாக மற்றொரு தரப்புடன் ராகேஷுக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதத்தால் ராகேஷ் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ரவுடி திண்டுக்கல் பாண்டி
திண்டுக்கல்லில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் பாண்டி உள்ளிட்ட ரவுடிகள் ஒருகாலத்தில் தமிழகத்தையே கலக்கினர். இன்றைக்கும் தமிழகத்தின் பல பகுதிகளில் திண்டுக்கல் பாண்டியின் கூட்டாளிகள் தாதாக்களாக வலம் வருகின்றனர். 2010-ம் ஆண்டு திண்டுக்கல் பாண்டியும் கூட்டாளியும் சென்னை அருகே என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பழனி துப்பாக்கிச் சூடு
கடந்த 2020-ம் ஆண்டு திண்டுக்கல் அருகே பழனியில் நிலத்தகராறில் தியேட்டர் உரிமையாளர் ஒருவர் பட்டப் பகலில் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பழனியில் தியேட்டர் உரிமையாளர் நடராஜனுக்கும் அப்பகுதியை சேர்ந்த பழனிசாமி, சுப்பிரமணி ஆகியோருக்கும் இடையே ரூ1 கோடி மதிப்பிலான நிலம் தொடர்பாக தகராறு இருந்தது. இந்த சம்பவத்தில் நடராஜன், துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் சுப்பிரமணி என்பவர் உயிரிழந்தார். தற்போது மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது.
-
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications