பல கோடி செலவு பண்ணி..மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு! அதை மட்டும் செய்யாதீங்க.. உருக்கமாய் பேசிய சூரி
திண்டுக்கல்: திருட்டுத்தனமாக வெளியிடப்படும் புது படங்கள் சமூக வலைதளங்களில் பார்த்தாலும் படம் நன்றாக இருந்தால் மீண்டும் தியேட்டரில் வந்து மக்கள் பார்க்கின்றனர் எனவும், பல கோடி செலவு செய்து எடுத்து விட்டு இயக்குனர், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் படம் எப்படி வரும், மக்கள் வரவேற்பு கொடுப்பார்களா என கடவுளை வேண்டிக் கொண்டு இருக்கும் பொழுது தவறான முறையில் திருட்டுத்தனமாக படங்கள் வெளியிடும்போது மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது நடிகர் சூரி கூறியுள்ளார்.
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி கதை மற்றும் நடிப்பில், மாமன் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து சூரி திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
அந்த வகையில், திண்டுக்கல் தனியார் திரையரங்கிற்கு வருகை தந்த நடிகர் சூரி மாமன் படம் குறித்து திண்டுக்கல் மக்களிடம் கேட்டறிந்து, பொதுமக்களிடம் செல்பி எடுத்துக் கொண்டார்.

பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்," "மாமன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. திரையரங்குகள் அனைத்திலும் நல்ல வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர். கொஞ்சம் கூட படத்திற்கு மாறுபட்ட கருத்துக்கள் இல்லை. வருடம் வருடம் குடும்ப சார்ந்த படங்கள் எடுக்க ஆசைப்படுகிறேன். படத்தை வெற்றி படமாக மாற்றிய தாய்மார்களுக்கு மிக மிக நன்றி. இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் குடும்பத்திலும் இது போன்று நடந்துள்ளது.
அது மட்டுமல்லாமல் அனைத்து குடும்பத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளதாக படம் பார்த்தவர்கள் தெரிவித்து வருகின்றனர். பல நபர்கள் பலவிதமான தங்கள் வாழ்க்கையில் நடந்ததை என்னிடம் பகிர்ந்துள்ளனர். சினிமா என்று இல்லாமல் அனைவரின் வாழ்க்கையின் இணைக்கக் கூடிய படமாக இது இருக்கும். கதாநாயகனாக தொடர்ந்து வெற்றி படங்கள் வந்து கொண்டே இருக்கிறது இருந்தாலும் மக்களே கூறுங்கள் நகைச்சுவை நாயகனாக இருக்க வேண்டுமா அல்லது கதாநாயகனாக நடிக்க வேண்டுமா என்று. எங்கு இருக்க வேண்டும் என்பதை மக்களே கூறட்டும்.
தற்போது இங்கு இருப்பதற்கு மக்களே காரணம். மக்கள் வரவேற்பு இல்லாமல் எந்த ஒரு விஷயமும் நடக்காது. தற்போது எங்களது உணவகம் மக்கள் வரவேற்பு காரணமாக உயர்ந்துள்ளது. நகைச்சுவை என்பது எல்லோரிடமும் இருக்கும். கதாநாயகனாக நடித்தாலும் நகைச்சுவை கொடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். நகைச்சுவைக்கு என தனி உருவம் கிடையாது. கதாநாயகனாக தற்போது நடிக்கும் வாய்ப்புக்கு இடையூறு இல்லாமல் பெரிய நடிகருடன் நகைச்சுவை வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். எனக்கு சரியாக இருக்கும் பட்சத்தில் நடிப்பேன்.
சமூக வலைதளங்களில் புது படங்கள் வெளியாகும் போது அதற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. நல்ல படங்களை பல கோடி செலவு செய்து எடுத்துவிட்டு இயக்குனர், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் படம் எப்படி வரும், மக்கள் வரவேற்பு கொடுப்பார்களா என கடவுளை வேண்டிக் கொண்டு இருக்கும் பொழுது தவறான முறையில் திருட்டுத்தனமாக படங்கள் வெளியிடும்போது மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.
புது படங்களை திருட்டுத்தனமாக சமூக வலைதளங்களில் வெளியிடுவது மற்றொருவர் குழந்தையை கொண்டு வந்து கொல்வதற்கு சமம். இதனை செய்பவர்கள் பல வருடமாக செய்து கொண்டிருக்கிறார்கள் மக்கள் இதனை வரவேற்க கூடாது. பல வருடங்களாக அனைத்து அரசுகளும் இதனை ஒழிக்க பல வழிகளை செய்து வருகின்றனர். ஆனால் தற்போது மக்கள் புறக்கணித்து வருகின்றனர். என்ன இருந்தாலும் தியேட்டரில் சென்று படம் பார்ப்பது என்பது எங்கும் கிடைக்காது. சமூக வலைதளங்களில் படங்கள் பார்த்தாலும் படம் நன்றாக இருந்தால் மீண்டும் தியேட்டரில் வந்து மக்கள் பார்க்கின்றனர். மக்கள் தியேட்டருக்கான வரவேற்பு கொடுத்து தான் வருகின்றனர்." என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications