Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல யூடியூபர் வெளியிட்ட வீடியோ.. துணை நடிகை திவ்யபாரதி தற்கொலை முயற்சி!.. திண்டுக்கல்லில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: பிரபல யூடியூபர் தன் மீது மோசடி புகார் கூறியதை அடுத்து துணை நடிகை திவ்யபாரதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

Recommended Video

    Dressing Room குள்ள வந்து செ* டார்சர் பண்ணான் - திவ்யபாரதி

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் பகலவன் ராஜா. இவர் யூடியூப் சேனல் வைத்து நடத்தி வருகிறார். இதில் நடிப்பதற்காக ஆட்களை தேடிய போது திண்டுக்கலலை சேர்ந்த தாடிக்கொம்புவை சேர்ந்த திவ்யபாரதி என்பவர் இவருக்கு அறிமுகம் ஆனார்.

    இவர் சினிமாவில் துணை நடிகையாகவும் விளம்பரங்களிலும் நடித்து வந்துள்ளார். இவரை வைத்து ஒரு கவிதை தொகுப்பை வீடியோவாக பகலவன் ராஜா வெளியிட்டார். அப்போது இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட்டது.

    திவ்யபாரதி

    திவ்யபாரதி

    திவ்யபாரதி பகலவன் ராஜாவிடம் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நிலையில் கொடைக்கானலில் உள்ள பகலவன் ராஜாவின் வீட்டிற்கு சென்ற திவ்யபாரதி அங்கேயே தங்கியுள்ளார். அவருடன் இரு பெண் குழந்தைகளையும் அழைத்து சென்றுள்ளார். அந்த குழந்தைகள் யார் என பகலவன் கேட்ட போது அவர்கள் தனது அக்காளுடைய குழந்தைகள்.

    கணவரை பிரிந்த பெண்

    கணவரை பிரிந்த பெண்

    தனது அக்காவை விட்டு அவரது கணவர் பிரிந்து விட்டதால் அந்த குழந்தைகளை தான் வளர்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் திவ்யபாரதி தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் திவ்ய பாரதியை பகலவன் காதலித்ததாக தெரிகிறது. அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கவும் பகலவனுடைய தாயார் முடிவு செய்திருந்தார்.

    திவ்யபாரதி

    திவ்யபாரதி

    ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் திவ்யபாரதி காலத்தை தாழ்த்தியதாக தெரிகிறது. பின்னர் திண்டுக்கல்லில் திவ்யபாரதிக்கு என தனியாக வீடு பார்த்து வைத்த பகலவன் அவருக்கு மாதச் செலவுக்கு ரூ 30 ஆயிரம் கொடுத்து வந்துள்ளார். பின்னர் திவ்யபாரதி தனது மருத்துவ செலவுக்கு என கூறி ரூ 9 லட்சத்தை பெற்றதாகவும் தெரிகிறது.

    பணம், நகை

    பணம், நகை

    இப்படியே பணம், நகைகளை திவ்யபாரதி பெற்று வந்த நிலையில் திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே திவ்யபாரதி பகலவனிடம் சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த பகலவன், திவ்யபாரதி குறித்து விசாரித்த போதுதான் அவருக்கு ஏற்கெனவே திருமணமானதும் அவருக்கு பிறந்ததுதான் அந்த இரு பெண் குழந்தைகளும் என தெரியவந்தது.

    ரூ 30 லட்சம் மோசடி

    ரூ 30 லட்சம் மோசடி

    இதையடுத்து தன்னை ஏமாற்றி ரூ 30 லட்சம் மோசடி செய்ததாக பகலவன், திவ்யபாரதி மீது தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் திவ்யபாரதி தன்னுடன் பணியாற்றும் ஆண்களுடன் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருடன் தொடர்பில் இருந்து பணத்தை பறித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    தற்கொலை முயற்சி

    தற்கொலை முயற்சி

    இந்த நிலையில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறிய பகலவன் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் திவ்யபாரதி மீது மேலும் பல மோசடி புகார்கள் உள்ளதாக ஒரு வீடியோவை பகலவன் ராஜா வெளியிட்டார். இதனிடையே திவ்யபாரதி வாளப்பட்டியில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+