முதல்வராக போகிற... ஸ்டாலின் குறித்து பேசிய அதிமுக எம்எல்ஏ பரமசிவம்- திருத்திய திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல்: அடுத்து முதல்வராக வர போகிறவர் ஸ்டாலின் என வேடசந்தூர் சட்டசபை தொகுதி அதிமுக எம்எல்ஏ பரமசிவம் வாய்தவறி பேசியது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்தது.
Recommended Video
திண்டுக்கல்லில் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளையொட்டி அதிமுக பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற வேடசந்தூர் அதிமுக எம்எல்ஏ பரமசிவம் பேசுகையில் ஸ்டாலினைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது நாளைக்கு முதல்வராக கூடிய ஸ்டாலின் அனைவரையும் ஒரே பார்வையில் பார்க்க வேண்டும் எனக் கூறினார். இதைப் பார்த்த வனத்துறை அமைச்சர் சீனிவாசன் அதிர்ச்சியாகி பரமசிவத்தை பார்த்து மாற்றி சொல்லுமாறு கூறினார்.

கூட்டம்
இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட பரமசிவம், வரலாற்று பிழை இழைத்து விட்டேன். எனது வாயை டெட்டால் மற்றும் பினாயில் கொண்டு கழுவுவேன் என மேடையிலேயே பேசினார். இதனால் அந்த கூட்டத்தில் அதிர்வலைகள் ஏற்பட்டது.

மன்மோகன் சிங்
இதையடுத்து பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ்- திமுக கூட்டணிதான். நீட் தேர்வை கொண்டு வந்தவர் பிரதமர் முலாயம் சிங் என கூறிவிட்டு சுதாரித்துக் கொண்ட திண்டுக்கல்லார் மன்மோகன் சிங் என கூறினார்.

வாடிக்கை
இது போல் ஒவ்வொரு முறையும் பொதுக் கூட்டங்களில் எதையாவது உளறுவதையே திண்டுக்கல்லார் வாடிக்கையாக கொண்டுள்ளார். ஆனால் இம்முறை அதிமுக எம்எல்ஏ பரமசிவம் தவறுதலாக பேசிவிட அது ஹைலட்டாகிவிட்டது. இருவரின் பேச்சையும் கேட்ட பொதுமக்கள் சிரித்தனர்.

ஆப்பிள் சின்னம்
பாமகவின் சின்னம் மாம்பழம் என்பதற்கு பதிலாக ஆப்பிள் என்றும் தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் என்றும் திண்டுக்கல் சீனிவாசன் மாற்றி மாற்றி பேசியிருந்தார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது போல் சீனியர் அமைச்சரே உளறினால் என்ன செய்வது என அதிமுகவினர் முணுமுணுக்கிறார்கள்.
-
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications