Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'நீ நடிகன்யா'.. திண்டுக்கல் தேவாலயத்தில் கர்த்தரின் முன்பாக முழங்காலிட்டு.. செய்த வேலையை பாருங்க

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் : திண்டுக்கல் முள்ளிப்பாடி தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு, கர்த்தரின் முன்பாக முழங்காலிட்டு உண்டியலில் உள்ள பணத்தை லாவகமாக திருடி உள்ளார் மர்ம ஆசாமி. சில நொடிகளில் உண்டியலை காலி செய்த அவர், அந்த நேரம் ஒரு பெண் வந்ததால், கர்த்தரை வணங்குவது போல் நாடகமாடினார்.. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

திருட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அது எந்த இடமாக இருந்தாலும் திருடர்கள் விட்டுவைப்பது இல்லை.. சர்வ சாதாரணமாக புகுந்து திருடுகிறார்கள். அந்த காலத்தில் சிசிடிவி கேமராக்கள் இருக்காது.. இந்த அளவிற்கு கண்காணிப்பும் இருக்காது. அப்போது எல்லாம் ஒரு பொருள் திருடு போனால், சாட்சிகள் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில் தான் விசாரணை நடைபெறும். இப்போது அப்படி அல்ல ஒருவர் திருடிவிட்டு பத்து மாவட்டம் கடந்து போனாலும், சிசிடிவி காட்சிகளை வைத்து பிடித்து விடுவார்கள்.

After lighting a candle in Dindigul Mullipadi church the mysterious assailant stole the money from the undiyal

உதாரணத்திற்கு சென்னையில் நடந்த ஒரு சம்பவத்தை பாருங்கள்.. சென்னையில் ஒரு திருடன் பைக்கை லாவகமாக உடைத்து திருடினார். அந்த பைக்கை வட சென்னையில் பல சந்து பொந்திற்குள் ஓட்டிச்சென்று தனது வீட்டிற்கு கொண்டு போய்விட்டார். கிட்டத்தட்ட 1000 தெருக்களை கடந்த அவர் போயிருந்தார்.. ஆனால் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தார்கள் போலீஸ்.

ஏனெனில் சென்னையில் சிசிடிவி காட்சிகள் அந்த அளவிற்கு தெருவுக்கு தெரு மட்டுமல்ல.. வீட்டிற்கு வீடு இருக்கிறது. ஒருவர் திருடிவிட்டு தப்பி ஓடினால். சென்னையில் மாநகராட்சி அமைத்துள்ள கேமராக்களை வைத்தே குற்றவாளி எந்த ஏரியாவில் பதுங்கி உள்ளார் என்பதை இருந்த இடத்தில் இருந்தே போலீசாரால் கண்டுபிடித்துவிட முடியும்..

சென்னை மட்டுமல்ல.. மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி, உள்பட தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் குற்றவாளிகளை சிசிடிவி காட்சிகளை வைத்து அடையாளப்படுத்தி போலீசார் கண்டுபிடிக்கிறார்கள். சிசிடிவி ஒருவேளை திருட்டு நடைபெற்ற இடங்களில் இல்லை என்றால் தான் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். அதுவும் கிராமப்புறங்களில் இந்த நிலை இருக்கிறது.

சரி விஷயத்திற்கு வருவோம்.. திண்டுக்கல் முள்ளிப்பாடி தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு, கர்த்தரின் முன்பாக முழங்காலிட்டு உண்டியலில் உள்ள பணத்தை லாவகமாக திருடி உள்ளார் மர்ம ஆசாமி. கர்த்தரை பயப்பக்தியுடன் வணங்குவது போல் தேவலாயத்திற்குள் வந்த அந்த மர்ம ஆசாமி முதலில் மெழுகுவர்த்தி ஏற்றினார்.

பின்னர் தரையில் முழங்காலிட்டார். சுற்றி யாரும் இல்லை என்பதை அறிந்த அவர், சில நொடியில் உண்டியலுக்குள் கைவிட்டார். உள்ளே இருந்த பணம் முழுவதையும் எடுத்தார். எடுத்து முடிக்கும் போது, திடீரென ஒரு பெண் வந்தார். இதை கவனித்த அந்த மர்ம ஆசாமி.. ஒரு நிமிடம் எழுந்து அப்படியே மெழுகுவர்த்தியை வெறிக்க பார்த்துவிட்டு, கர்த்தரை வணங்குவது போல் பாவலா காட்டி கம்பி நீட்டினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+