”அப்படி நடந்தால்..” அரசியலுக்கே நான் முழுக்கு போடுறேன்.. திண்டுக்கல் சீனிவாசன் திடீர் அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு கையெழுத்து இயக்கம் மூலம் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டால் தாம் அரசியலைவிட்டே விலகுகிறேன் என அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டசபை தொகுதி எரியோட்டில் அதிமுகவின் 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றிவிட்டது என்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது அத்தனையும் பொய். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது. முதல் கையெழுத்தே நீட் ரத்து என்றார்கள். இதுவரை நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லையா? ஏன் பேனா கிடைக்கவில்லையா? இப்போது எதற்காக கையெழுத்து இயக்கம் நடத்துகிறீர்கள்?

அரசியலை விட்டே விலகுகிறேன்: நீங்கள் பங்கேற்ற காங்கிரஸ் ஆட்சிதானே நீட் தேர்வை கொண்டு வந்தது. உச்சநீதிமன்றமே நீட் தேர்வு கட்டாயம் என சொன்ன பிறகு யாரை ஏமாற்ற கையெழுத்து இயக்கம்? அப்படி இந்த கையெழுத்து இயக்கம் மூலம் நீட் தேர்வை நீங்கள் ரத்து செய்துவிட்டால் அரசியலில் இருந்தே விலகுகிறேன். ஆரியம், திராவிடம் பற்றி ஆளுநர் பேசியதில் என்ன தவறு உள்ளது? ஆளுநரை திமுகவினர் இழிவுபடுத்துகின்றனர். ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
சட்டத்தை கையில் எடுத்தால்?: இந்தக் கூட்டத்தில் அதிமுக மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் வி.பி.பி. பரமசிவம் பேசுகையில், நீட் தேர்வால் பாதிக்கப்பட்டோம். ஆனால் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கி நீட் தேர்வு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தது அதிமுக அரசு. இப்போது நீங்கள் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை மிரட்டி கையெழுத்து வாங்குகிறீர்கள். அதிமுக தொண்டனும் நினைத்தால் பள்ளிக்குள் சென்று மாணவர்களிடம் நீட் தேர்வு பிரச்சனை முடிந்துவிட்டது என எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கையெழுத்து வாங்க முடியும். ஆனால் அதிமுகவினர் சட்டத்தை கையில் எடுக்க மாட்டார்கள்.

அண்ணாவுக்காக கூட்டணியை உதறினோம்: ஆரியம் -திராவிடம் குறித்து ஆளுநர் பேசியதற்கு அண்ணா திமுகவை திமுக விமர்சிக்கிறது. ஆனால் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியதற்கு திமுகதானே மவுனம் காத்தது. அண்ணாவை விமர்சித்த காரணத்தால் பாஜகவுடனான கூட்டணியே வேண்டாம் என உதறி தள்ளியது அண்ணா திமுகதானே. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக 40-க்கு 40 இடங்களைக் கைப்பற்றும். மத்தியில் பாஜகவுக்கு ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் கிடைக்காது; அப்போது அதிமுகவின் கதவுகளை தட்ட தேடித்தான் வருவார்கள். ஆனாலும் அதிமுகவின் கதவுகள் பாஜகவுக்காக திறக்காது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications