போஸ்டர் மட்டும் போதுமா? ஒரு மாசம் ஆகியும் நன்றி சொல்லாத சச்சிதானந்தம்! அட்டாக்கை ஆரம்பித்த அதிமுக..!
திண்டுக்கல்: திண்டுக்கல் மக்களவை தொகுதியில் பெருவெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் தேர்தல் முடிவுகள் வெளி வந்து ஒரு மாதம் ஆகியும் மக்களுக்கு நன்றி சொல்லக் கூட வராமல் வெறும் போஸ்டரோடு நின்று விட்டதாக அதிமுகவினர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். கடந்த தேர்தலில் மக்களை சந்திக்காததால் சீட்டு மறுக்கப்பட்ட வேலுச்சாமி செய்த தவறை சச்சிதானந்தமும் செய்து வருகிறார் என்கின்றனர் திமுகவினர்.
2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதி சிபிஐ எம்-க்கு ஒதுக்கப்பட்டது. யார் வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான சச்சிதானந்தம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

திமுக அமைச்சர்களான ஐ.பெரியசாமி சக்கரபாணியின் ஆதரவு, நீண்ட நெடிய அரசியல் பயணம், மக்கள் போராட்டத்தில் பங்கேற்றதன் விளைவு என சுமார் 4.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெருவெற்றி பெற்றிருக்கிறார்.
நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 44,3933 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர், 670502 வாக்குகளை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் முகமது முபாரக் 226569 வாக்குகளும், பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா 112544 வாக்குகள் மட்டுமே பெற்றனர்.
திண்டுக்கல்லில் விவசாயிகளுக்காகவும், பழங்குடியின மக்களுக்காகவும் பல போராட்டங்களை நடத்தி இருக்கிறார் சச்சிதானந்தம். மேலும் இளம் வயதிலேயே ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், தனது வெற்றிக்காக உழைத்த கட்சியினருக்கும், வாக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவித்து சச்சிதானந்தம் சார்பாகவும், கூட்டணி கட்சி சார்பாகவும், திண்டுக்கல் மக்களவை தொகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து தான் பிரச்சினையே ஆரம்பித்துள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட புதுமுக வேட்பாளரான வேலுச்சாமி தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தல் முடிவடைந்த உடன் சில வாரங்கள் கழித்து அவர் பொது மக்களிடம் நன்றி தெரிவித்தார். ஆனால் அதற்குப் பிறகு தொகுதி பக்கமே அவர் செல்லவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக ஒட்டன்சத்திரம் பகுதியில் அமைச்சர் சக்கரபாணி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் மட்டுமே அவர் தலைகாட்டினார் என்ற மிகப்பெரிய குற்றச்சாட்டும் இருந்தது.
மேலும் எம்பி யார் என்று பலருக்கு தெரியாத நிலையில் அவர் மீண்டும் போட்டியிட்டால் பெரும் அதிருப்தியை சந்திக்க வேண்டும் என்பதாலேயே கூட்டணி கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டது. இதை எடுத்து நீண்ட இழுபறிக்கு பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்த சச்சிதானந்தம் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அவரது வெற்றிக்கு திமுகவின் இரு அமைச்சர்களும் கூட்டணி கட்சியினரும் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் சுமார் 4.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சச்சிதானந்தம் மிகப்பெரிய வெற்றி பெற்றார். இதை அடுத்து கூட்டணி கட்சியில் தங்களுக்கு ஆதரவு திரட்டிய அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சியினரை தொகுதி வாரியாக சென்று சச்சிதானந்தம் நன்றி தெரிவித்தார். அதே நேரத்தில் ஒரு நாள் கூட வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தான் திண்டுக்கல் முழுவதும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதில்,"நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட தனக்கு பெருவாரியாக வாக்குகள் அளித்து நான்கு லட்சத்தி 43 ஆயிரத்து 821 வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியடைய செய்த அனைத்து வாக்காளர்கள் பெருமக்களுக்கும் நன்றி நன்றி" என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதை வைத்துதான் தற்போது அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.

திமுகவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற கனிமொழி உள்ளிட்ட பெரிய அரசியல் தலைவர்கள் கூட வீதி வீதியாக சென்று தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தி வருகின்றனர். மேலும் தேர்தலில் தோற்றாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளரான சௌமியா அன்புமணி, இயக்குனர் தங்கர்பச்சான் நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட பலரும் நேரடியாக சென்று தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். ஆனால் கூட்டணி கட்சி ஆதரவோடு வெற்றி பெற்ற சச்சிதானந்தம் வெறும் போஸ்டரோடு நன்றி தெரிவித்திருப்பது கூட்டணி கட்சியினரையே அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் எம்பியாக அவர் பதவியேற்றார். ஆனால் சுமார் ஒரு மாதம் திண்டுக்கல்லிலேயே இருந்த நிலையில் சச்சிதானந்தம், கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வது கூட்டணி கட்சியினருக்கு நன்றி தெரிவிப்பது என இருந்தும் ஒரு நாளாவது மக்களுக்கு நன்றி தெரிவித்திருக்கலாம் என கூட்டணி கட்சியினரே பேசி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இந்த போஸ்டர்களை புகைப்படம் எடுத்து அதிமுகவினர் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications