திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேலை வாங்கத் தருவதாக ரூ.91 லட்சம் மோசடி - திண்டுக்கலில் அதிமுக பிரமுகர் கைது!

Google Oneindia Tamil News

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, பலரிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி அதிமுக முன்னாள் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்ட அதிமுக பிரமுகரும், முன்னாள் திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான சோனா சுருளி, முந்தைய அதிமுக ஆட்சியின் போது, திண்டுக்கல்லில் 15க்கும் மேற்பட்ட நபர்களிடம் மோசடி செய்துள்ளார். அவரது மனைவி எஸ். ஆலயம், மற்றும் தனியார் அறக்கட்டளையைச் சேர்ந்த திவ்யா இதய சந்திரன் ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

AIADMK leader arrested for scamming government job in Dindigul

மின்வாரியம், மீன்வளத்துறை, ஆவின், மாநகராட்சி மற்றும் பல்வேறு அரசு பணிகளில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்ததை கூறி பலரிடம் பணம் வாங்கிய சோனா சுருளி, யாருக்கும் யாருக்கும் வேலை வாங்கித் தரவில்லை. மேலும், வேலை வாங்கி தருவதற்காக பணம் கொடுத்தவர்கள், அவரிடைம் திரும்ப கேட்கும் போதெல்லாம் பணத்தை திரும்ப தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதனால் பொறுமை இழந்த பாதிக்கப்பட்டவர்கள், திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாஸ்கரிடம், சோனா சுருளி மீது புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், சோனா சுருளி மீது வழக்கு பதிவு செய்து இன்று கைது செய்தனர். சோனா சுருளி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள ஆலயம் மற்றும் திவ்யாவை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதனிடையே, திண்டுக்கல் நாகர்நகர் பகுதியைச் சேர்ந்த சசிகுமாரிடம், மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சோனா சுருளி 5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாக, பாதிக்கப்பட்ட சசிகுமாரி தயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதேபோல் பல பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக்கொண்டு சோனா சுருளி மோசடியில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2021-ஆம் ஆண்டு, அரசாங்க வேலை வாங்கித் தருவதாக நான்கு பேரிடம் ரூ.11.50 லட்சம் மோசடி செய்த குற்றச்சாட்டில் சோனா சுருலி மீது ஏற்கெனவே போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில், அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி ஈடுபட்ட அதிமுக பிரமுகரை, போலீசார் கைது செய்த சம்பவம், திண்டுக்கல்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
AIADMK official arrested for fraud: திண்டுக்கல்லில் பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.91 லட்சம் மோசடி செய்த அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X