முளைச்சு மூணு இலை விடல.. ஒரே சம்பவத்தில் செட்டில்! பைக் நம்பரால் காத்திருந்த ட்விஸ்ட்! சபாஷ் போலீஸ்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே தனியார் ஏடிஎம்-ல் பணத்தை நிரப்ப 29 லட்சம் ரூபாயை கொண்டு சென்ற இளைஞரை கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து வந்த போலீசார் சிறுவன் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர். மேலும் குற்றவாளிகள் சிலரை தேடி வருவதாக கூறியுள்ளனர் போலீசார். கொள்ளையர்களின் இருசக்கர வாகன எண்ணை வைத்து கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறுகின்றனர்.
தேனி மாவட்டம், தேவதானப்பட்டியைச் சேர்ந்தவர் நாக அர்ஜுன். 30 வயதான இவர், தனியார் ஏ.டி.எம்,மில் பணம் வைக்கும் ஏஜென்சி நடத்தி வரும், தேவதானப்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவரிடம் நாக அர்ஜுன் உட்பட இரண்டு பேர் பணியாற்றி வருகின்றனர்.
திண்டுக்கல் மற்றும் தேனியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான 18 ஏ.டி.எம்.,களில் இவர்கள் பணம் வைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், நாக அர்ஜுன் வெள்ளிக்கிழமை மாலை வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி, கே.சிங்காரக்கோட்டை, செம்பட்டி உள்ளிட்ட ஏ.டி.எம்.,மில் பணம் வைத்துள்ளார்.

அங்கு பணி முடிந்ததும் சின்னாளபட்டியில் உள்ள ஏ.டி.எம்.,மில் பணம் வைப்பதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் ரூபாய் 29 லட்சத்துடன் செம்பட்டி அடுத்த, புதுகோடாங்கிபட்டி - அம்பாத்துரை சாலையில் சென்றுள்ளார். அப்போது, புதுகோடாங்கிபட்டியை அடுத்த டாஸ்மாக் மதுக்கடை அருகே, இவரை வழிமறித்த 3 மர்ம நபர்கள் இவரின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்து விடுவோம் என மிரட்டி ரூபாய் 29 லட்சத்தை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ஏஜென்சி உரிமையாளர் முருகனுக்கு தகவல் தெரிவித்தார். இந்நிலையில், முருகன் செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி.கார்த்திகேயன் விசாரணை நடத்தி, செம்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரான்சிஸ் தீபா, விஜயபாண்டி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து, அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர்.
விசாரணையில் கொள்ளையர்கள் தப்பி ஓடிய வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து அந்த இருசக்கர வாகனம் தேவதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தது என தெரிய வந்துள்ளது. இதன்படி இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தேவதானப்பட்டியைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் சுரேந்தர் (25) ஆமனுல்ஸ் மகன் முகமது இத்ரீஸ் (20) காமாட்சி மகன் ப்ரீத்திவ் (19) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 கொள்ளையர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாக அர்ஜூன் வங்கியில் பணம் செலுத்துவதற்காக பணத்துடன் சென்று வந்ததை இவர்கள் பல நாட்களாகவே நோட்டமிட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் தான் சம்பவம் நடந்த அன்று நாக அர்ஜுன் தனியாக வருவதை பயன்படுத்தி கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்துச் சென்றது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இதே போல பல இடங்களில் இவர்கள் கைவரிசை காட்டி வந்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் அம்பலமாகி இருக்கும் நிலையில், மீதமுள்ள குற்றவாளிகளை கைது செய்தால் தான் முழு தகவல்கள் தெரியவரும் என்கின்றனர் போலீசார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள செம்பட்டி போலீசார் மேலும், சிலரை தேடி வருகின்றனர். ஏடிஎம்மில் ரூ.29 லட்சம் வைக்க சென்ற போது கொள்ளை போன சம்பவம் இந்த இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications