ஏறுனா ரயிலு.. இறங்குனா ஜெயிலு..போட்டா பெயிலு! ஆசிரியரை மிரட்டிய பையன் இப்போ எப்படி இருக்கானு பாருங்க

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் ஏடிஎம்மில் வைக்கச் சென்ற 25 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞர்களில் ஒருவரான தவம் என்ற பிரித்விவ் என்பவர் ஆசிரியரை மிரட்டி சமூக வலைதளங்களில் கண்டனத்திற்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேனி மாவட்டம், தேவதானப்பட்டியைச் சேர்ந்தவர் நாகஅர்ஜுன். 30 வயதான இவர், தனியார் ஏ.டி.எம்,மில் பணம் வைக்கும் ஏஜென்சி நடத்தி வரும், தேவதானப்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவரிடம் நாகஅர்ஜுன் உட்பட இரண்டு பேர் பணியாற்றி வருகின்றனர்.

திண்டுக்கல் மற்றும் தேனியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான 18 ஏ.டி.எம்.,களில் இவர்கள் பணம் வைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், நாகஅர்ஜுன் கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி மாலை வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி, கே.சிங்காரக்கோட்டை, செம்பட்டி உள்ளிட்ட ஏ.டி.எம்.,மில் பணம் வைத்துள்ளார்.

Dindigul crime police

அங்கு பணி முடிந்ததும் சின்னாளபட்டியில் உள்ள ஏ.டி.எம்.,மில் பணம் வைப்பதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் ரூபாய் 29 லட்சத்துடன் செம்பட்டி அடுத்த, புதுகோடாங்கிபட்டி - அம்பாத்துரை சாலையில் சென்றுள்ளார். அப்போது, புதுகோடாங்கிபட்டி அடுத்த டாஸ்மாக் மதுக்கடை அருகே, இவரை வழிமறித்த 3 மர்ம நபர்கள் இவரின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்து விடுவோம் என மிரட்டி ரூபாய் 29 லட்சத்தை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ஏஜென்சி உரிமையாளர் முருகனுக்கு தகவல் தெரிவித்தார். இந்நிலையில், முருகன் செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி.கார்த்திகேயன் விசாரணை நடத்தி, செம்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரான்சிஸ் தீபா, விஜயபாண்டி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து, அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர்.

விசாரணையில் கொள்ளையர்கள் தப்பி ஓடிய வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து அந்த இருசக்கர வாகனம் தேவதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தது என தெரிய வந்துள்ளது. இதன்படி இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தேவதானப்பட்டியைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் சுரேந்தர் (25) ஆமனுல்ஸ் மகன் முகமது இத்ரீஸ் (20) காமாட்சி மகன் பிரித்விவ்(19) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 கொள்ளையர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

நாக அர்ஜூன் வங்கியில் பணம் செலுத்துவதற்காக பணத்துடன் சென்று வந்ததை இவர்கள் பல நாட்களாகவே நோட்டமிட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் தான் சம்பவம் நடந்த அன்று நாக அர்ஜுன் தனியாக வருவதை பயன்படுத்தி கத்தியை வைகாட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்துச் சென்றது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட தவம் என்ற ப்ரீத்திவ் என்பவர் தேவதானப்பட்டி பள்ளியில் படித்தபோது, பள்ளி வளாகத்தில் சக மாணவர்கள் முன்னிலையில், ஏறுனா ரயிலு, இறங்கினால் ஜெயிலு, போட்டால் பெயிலு எனவும், தவம் இருக்கும் வரை, இந்த தவம் ? *** கூட புடுங்க முடியாது என ஒருமையில் பேசி, பள்ளி ஆசிரியரை மிரட்டும் தொனியில் பேசியவர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படிக்கும் ஆசிரியர்களை மதிக்காத நிலையில், தற்போது அவரே கொள்ளையனாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+